ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் நுழைய ஜெயேந்திரருக்குத் தடை!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற ஜெயேந்திரரை அர்ச்சகர்கள்தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்கும், ஜெயேந்திரருடன் வந்த சங்கர மட பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது.

ஆண்டுதோறும் ஆடி மாத பெளர்ணமி தினத்தன்று ஜெயேந்திரர் ராமேஸ்வரம் சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.அதேபோல இன்று காலை அவர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். பொதுவாக அவர் கோவிலுக்கு வரும்போது பூரணகும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் வரவேற்பது வழக்கம்.

ஆனால் இன்று ஜெயேந்திரர் அங்கு வந்தபோது அவரை வரவேற்க யாரும் இல்லை. பூரண கும்ப மரியாதையும்கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத ஜெயேந்திரர் தன்னுடன் வந்த பக்தர்களுடன் கோவிலுக்குள்சென்றார்.

நேராக ராமநாதசுவாமி சன்னதிக்கு வந்த அவர், கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றார். ஆனால் அவரைகோவில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் தடுத்து நிறுத்தினர். கருவறைக்குள் ஜெயேந்திரர் நுழைய அனுமதி இல்லை என்றுஅவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஜெயேந்திரருடன் வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். ஜெயேந்திரரை உள்ளே நுழைய அனுமதித்தே ஆக வேண்டும்என்று அவர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

ஆனால் ஜெயேந்திரரை உள்ளே விட அரசு தடை விதித்துள்ளதால் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகிகள்திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதுதொடர்பாக சில நிமிடங்கள் அங்கு கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து தன்னுடன் வந்தவர்களைசமாதானப்படுத்திய ஜெயேந்திரர் வெளியில் இருந்தபடியே சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார்.

பின்னர் கடற்கரைப் பகுதியில் 51 வேத விற்பன்னர்கள் நடத்திய பூஜையில் கலந்து கொண்டார். அதன் பிறகு சங்கர மடம்சென்று அங்கும் பூஜையில் ஈடுபட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+