108 அம்மன் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா: தமிழக அரசு அறிமுகம்!
சென்னை:
தமிழகதிதல் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக புதிய சுற்றுலா பேருந்து வசதியைதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் 22ம் தேதி முதல் இந்த சேவை சென்னையில் தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா சிறப்பம்சம் கொண்ட, பழமை வாய்ந்த, சரித்திரச் சிறப்பு வாய்ந்த 108 அம்மன் கோவில்களைதரிசிப்பதற்காக இந்த சுற்றுலாப் பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் கால அளவு 5 நாட்கள் ஆகும்.
இந்தப் பேருந்தில் சென்று வர ஒரு நபருக்கு ரூ. 2,100 கட்டணமாக வசூலிக்கப்படும். சொகுசுப் பேருந்து போக்குவரத்து,தங்கும் வசதி, கோவில் தரிசனம் ஆகியவை இந்தக் கட்டணத்தில் அடங்கும்.
ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பேருந்து சென்னையிலிருது கிளம்பும்.
சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, காரைக்கால், நாகப்பட்டனம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி,காரைக்குடி, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 108 அம்மன் கோவில்களுக்குசுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி அம்மன் கோவில்களைத் தரிசிக்க விரும்புவோர் சென்னை வாலாஜா சாலையில் உள்ளதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது இடத்தை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தமிழ்நாடு சுற்றுலாத்துறை,எண் 2, வாலாஜா சாலை,(கலைவாணர் அரங்கம் அருகே)சென்னை - 600 002தொலைபேசி 044- 25368358












Click it and Unblock the Notifications