விநாயகர் சதுர்த்தி: ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தியில், நமது நாட்டு மக்கள் தொன்று தொட்டு முழு முதற் கடவுளாக துதிக்கப்பட்டு வரும் விநாயகப் பெருமானின்திரு அவதாரத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் எல்லா மக்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.சகல கணங்களுக்கும் தலைவர் என்பதால் கணபதி, விக்கினங்களைப் பொடிப் பொடியாக்குபவர் என்பதால் விக்னேஷ்வர் எனவிநாயகரின் பெருமைகளை எடுத்துக் காட்டும் விதத்தில் வ்ெவேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அவரைப் பிள்ளையார்என்று அன்போடு அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது தமிழகம்.
பாலை, தேனை, பாகை, பருப்பை இப்படி நான்கு பொருளைத் தந்து பிள்ளையாரிடம் மூன்று தமிழ் கேட்டார் அவ்வை.வேண்டியதை வேண்டியாங்கு விரைந்து வழங்கும் யானை முகத்தோன், அவரை வழிபடுவோருக்கு கற்பகக் கடவுளாகவிளங்குகிறார்.
வேழ முகத்து விநாயகப் பெருமானின் அருளாள் உலகத்தில் அமைதி நிலவட்டும். அனைவருக்கும் எல்லா நலமும், வளமும்பெருகட்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications