குஷ்புவைத் தண்டிக்கக் கோரி வழக்கு!
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்துத் தெரிவித்துள்ள நடிகை குஷ்புவைத் தண்டிக்கக் கோரி சென்னைநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தீபன் ஜெயக்குமார் என்பவர் இது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குதாக்கல் செய்துள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் திருமணத்திற்கு முன்பே பாலியல்உறவு வைத்திருப்பார்கள். அப்படி இல்லாத பெண்களே கிடையாது என்றரீதியில் குஷ்பு பேசியுள்ளார்.
இந்தக் கருத்து கலாச்சாரத்துடன் வாழும் தமிழக பெண்களை புண்படுத்தியுள்ளது. பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.தமிழ்ப் பெண்களை தனது கருத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக களங்கப்படுத்தி விட்டார் குஷ்பு.
எனவே அவரை இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500வது பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்தத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத்துக்கு பெண்கள் நோட்டீஸ்:
இதற்கிடையே குஷ்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கத் தலைவர் விஜய்காந்த், செயலாளர் சரத்குமார் ஆகியோருக்கு வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி,ஜெயலட்சமி, கோமதி ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டீசில்,
குஷ்புவின் பேச்சு ஒவ்வொரு தாயின் மனதையும் புண்படுத்திவிட்டது. அவர்களை அவமானத்தில் தலை குனிய வைத்துள்ளது.பெண்மைக்கு இழிவை ஏற்படுத்திய குஷ்பு, இந்திய-தமிழ் கலாச்சாரத்தையும் கேவலப்படுத்திவிட்டார். இவரைப் போன்ற ஒருஉறுப்பினர் உங்களுக்குத் தேவை தானா?. எனவே அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இல்லாவிட்டால் குஷ்புவுக்கு நடிகர் சங்கமும் துணை போவதாகவே கருதப்படும். அதற்கான விளைவுகளையும் நீங்கள் சந்திக்கவேண்டி வரும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications