பிகார் சட்டசபை கலைப்பு சட்ட விரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி:
பிகார் சட்டசபையைக் கலைத்தது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிகாரில் நடந்த தேர்தலையடுத்து தொங்கு சட்டசபை உருவானது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக-ஐக்கிய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜன்சக்தி ஆகியவை தனித்தனியாக இடங்களைக் கைப்பற்றியதால் யாராலும் ஆட்சியமைக்கமுடியவில்லை.இந் நிலையில் லோக் ஜன்சக்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றது. இதையடுத்து சட்டசபையைக் கலைக்கஆளுநர் பூட்டா சிங் பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டது.
இப்போது மீண்டும் அங்கு தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கிடையே சட்டசபைக் கலைப்பை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த அரசியல்சட்ட பெஞ்ச் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
அதில், ஆளுநர் பூட்டா சிங்கின் பரிந்துரையை ஏற்று பிகார் சட்டசபை கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதுஎன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திட்டமிட்டபடி பிகாரில் மறு தேர்தல் நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துவிட்டால் அதை நீதிமன்றத்தாலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications