மாஜி பாஜக அமைச்சரை சுட்டவர் விஎச்பி ஆதரவாளர்?
பாட்னா:
மாஜி பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை துப்பாக்கியால் சுட்டவர் பெயர் முன்னா ராய் என்றும் அவர் தீவிர விஸ்வ இந்து பரிஷத்ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
பிகாரில் சஸராம் என்ற இடத்தில் பிரமோத் மகாஜனுடன் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பிரசாத் சுடப்பட்டார்.அவரை சுட்ட ராயை பாஜக தொண்டர்கள் தாக்கியதில் அவர் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் அவரது சட்டைப் பையில் இருந்து கிடைத்த ஆதராங்களின் அடிப்படையில் ராய் ஒரு விஎச்பி ஆதரவாளர் என்றுதெரியவந்துள்ளதாக பிகார் மாநில உள்துறைச் செயலாளர் சிரோகி கூறியுள்ளார்.
ஆனால், இதை விஎச்பியும் பாஜகவும் கடுமையாக மறுத்துள்ளன.
உள்துறைச் செயலாளர் சிரோகிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக பிரமோத் மகாஜன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
ராயின் பையில் இருந்த கடிதத்தில், பகத் சிங், ராஜ்குரு, குருதேவ் ஆகிய தேசப்பற்றாளர்களைப் பின்பற்றி இந்த அதிகாரத் தரகர்களை(அரசியல்வாதிகளை) ஒழிப்பேன். இந்தத் தாக்குதலுக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தேசிய நலனுக்காக நான் இந்ததற்கொலைத் தாக்குதலை நடத்துகிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.
ரவிசங்கரையும் பிரமோத் மகாஜனையும் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்யும் முடிவுடன் ராய் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத்தெரிகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தத் தாக்குதல் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் பிகார் முதல்வரும் ரயில்வேஅமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கோரியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications