மனு மழை பொழிந்த பஞ். தலைவருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை:
அடுத்தடுத்து மனுக்களாக தாக்கல் செய்த பஞ்சாயத்துத் தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும்கண்டனம் தெரிவித்து, ரூ. 10,000 அபராதம் விதித்தது.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துத் தலைவர் பிலோமின் ராஜ். திமுகவைச் சேர்ந்தவர்.இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிமுருகேசன் விசாரித்தார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிலோமின் ராஜ் ஒரேபிரச்சினைக்காக பலமுறை மனு செய்துள்ளார்.
அந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விடாமல் தொடர்ந்து மனுக்களாக தாக்கல்செய்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.
இதைக் கருத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதி முருகேசன், மனுக்கள் தொடர்ந்து நிராகக்கப்பட்டு வரும் நிலையில்மறுபடியும் மறுபடியும் மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தையும், நீதிமன்றத்தையும் துஷ்பிரயோகம்செய்துள்ளார் பிலோமின்ராஜ்.
அவருக்கு இந்த நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. நீதிமன்ற நேரத்தை துஷ்பிரயோகம்செய்தமைக்காக அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications