கைதிகளுக்கு சிம் கார்டு: 2 பேர் கைது
கோவை:
கோவை மத்திய சிறையில் கைதிகளுக்காக திருட்டுத்தனமாக கொடுக்கப்படவிருந்த 23 சிம் கார்டுகளை போலீஸார்பறிதல் செய்துள்ளனர், இதுதொடர்பாக 2 பேர் கைதாகியுள்ளனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூல்பிகர் அலி என்ற கைதியை சந்திக்க சுபேர் அலி என்பவர் சிறைக்குவந்திருந்தார். அவரது நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் மற்றும் போலீஸார், சுபேர்அலியை தீவிரமாக விசாரித்தனர்.விசாரணையின் போது அவரது உண்மையான பெயர் கம்மது அனீஸ் என்றும் கோட்டைமேடு பகுதியைச்சேர்ந்தவர் என்பதும், ஜூல்பிகர் அலிக்கு சிம் கார்டுகளை திருட்டுத்தனமாக கொடுக்க வந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அனீஸை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர். இதேபோல சிறையில் அடைக்கப்பட்டுள்ளதிருப்பூரைச் சேர்ந்த செந்தில் என்ற கைதிக்கு ரகசியமாக சிம் கார்டு கொடுக்க வந்த வெள்ளிங்கிரி என்றவாலிபரையும் போலீஸார் கைது செய்தனர்.
கோவை சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக முன்பு தகவல்கள்வெளியானது.
இதையடுத்து சிறைக்குள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைதிகளைப் பார்க்க வருவோர்மூலம் தான் சிம் கார்டுகள் அதிக அளவில் உள்ளுக்குள் வந்து செல்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் மற்றும் சிறைக் காவலர்களின் தீவிரக் கண்காணிப்பு காரணமாக சிம் கார்டு கொண்டு வருவோர்பிடிபட்டு வருகின்றனர்.
இதுவரை 23 கார்டுகள் பறிதல் செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications