இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் கெடு
கொழும்பு:
இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரன் கெடு விதித்துள்ளார். இல்லாவிட்டால் தனி அரசு அமைக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாளை வருடந்தோறும் நவம்பர் 27ல்புலிகள் கடைபிடித்து வருகின்றனர்.இந்த ஆண்டுக்கான வீர வணக்க நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இத் தினத்தையொட்டி விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரன் பேசியுள்ளதாவது:
எங்கள் மக்களின் பொறுமை குறைந்து விட்டது. நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஏமாற்றத்தின் விளிம்புக்கே சென்று விட்டனர்.எங்கள் மக்கள் இனிமேலும் பொறுத்துக் கொள்ளத் தயாரில்லைை.
ராஜபக்ஷே அரசின் நிலைக்கும் தமிழர்களின் கோரிக்கைகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் புதியஅதிபருக்கு கால அவகாசம் தருகிறோம்.
இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியுள்ளதைப் பார்க்கும்போது மகிந்தா ராஜாபக்ஷேவுக்கு நாங்கள் நடத்தி வந்தபோராட்டத்தின் அர்த்தம், அடிப்படை என்னவென்பது புரியவில்லை என்று தெரிகிறது.
அவர் நியாயமான முறையில், எங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு சரியான முறையில், விரையில் அரசியல் தீர்வு காண முன்வரவேண்டும்.
இது எங்களது அவசரமான இறுதியான வேண்டுகோள். இந்த வேண்டுகோளை அரசாங்கம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள்நிறைவேற்ற வேண்டும். அப்படியில்லாமல் எங்களது வேண்டுகோளை நிராகரித்தால் எங்களது மக்களை ஒன்று திரட்டி,எங்களுக்கான தனி அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
எங்களது சொந்த மண்ணில் சுய- தன்னாட்சி அரசாங்கத்தை நிறுவ, எங்களது தேச விடுதலைக்காகத் தீவிரமாகப் போராடுவோம்.எங்களது தமிழ் மக்களின் அரசியல் ஆசையை நிறைவேற்றியே தீருவோம்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்த சிங்கள தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில்நம்பிக்கை இழந்து விட்டோம். ஆகவே இப்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனைக்கு வந்திருக்கிறோம்.
இவ்வாறு தனது உரையில் பிரபாகரன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications