போலி: அதிமுக-திமுக மீது வழக்கு மேல் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி வாக்காளர்களை சேர்த்தது தொடர்பாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கோவில்பட்டி, திருச்செந்தூர்,தூத்துக்குடி நீதிமன்றங்களிலும் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்திலும் இன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

போலி வாக்காளர்களைச் சேர்த்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்துமாநிலம் மழுவதும் போலி வாக்காளர்களைச் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

இதில் அதிமுக விவிஐபிக்களே அதிகம் மாட்டி வருகின்றனர். மேலும் திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சி.வி.சண்முகம் ஆகியோர் மீது இன்று நீதிமன்றத்தில் முறைப்படிவழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோவில்பட்டி, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய நீதிமன்றங்களில் அனிதா மீது வழக்குகள்பதிவு செய்யப்பட்ன.

விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல நிலக்கோட்டை நீதிமன்றத்தில்அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மீது 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாஜி திமுக அமைச்சர் மீது 9 வழக்குகள்:

அதே போல போலி வாக்காளர்களைச் சேர்த்தது தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது திண்டுக்கல்நீதிமன்றத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் 3 பிரிவுகளின் கீழ் 9 வழக்குகள் அவர் மீது இன்று பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே திமுகவைச்சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி, கரூரைச் சேர்ந்த வாசுகி முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+