வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க நிபுணர் குழு வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பரிசோதிப்பதற்காகபெங்களூரிலிருந்து 40 பேர் கொண்ட நிபுணர் குழு தமிழகம் வந்துள்ளது.

தமிழகத்தில் மே மாத வாக்கில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படவுள்ளன. இதையடுத்து தற்போது உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த நிலையில் உள்ளனஎன்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு வந்துள்ளது.

பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து வந்துள்ள இந்தக் குழுவினர் தலா நான்கு பேர் கொண்ட 10 குழுக்களாகப் பிரிந்துதமிழகம் முழுவதும் சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 3 மாவட்டங்களில் உள்ள மின்னணு இயந்திரங்களைப்பரிசோதிக்கவுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் 52,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அவசர தேவைக்கான வாக்குப் பதிவுஇயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 67,000 இயந்திரங்கள் இத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+