அதிமுக டாக்டர் வீட்டில் வருமான வரி சோதனை
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான ஓய்வு பெற்ற அரசு டாக்டரின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள்விடிய விடிய சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள், பணம், நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலூரைச் சேர்ந்தவர் டாக்டர் கணேசன். அதிமுக பிரமுகர் ஆவார். இவர் அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.மேலூரில் இவர் கிளினிக் நடத்தி வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் கணேசன், முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிகிறது.இதைத் தொடர்ந்து அவரது வீடு மற்றும் கிளினிக்கில் நேற்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இரவும் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
சென்னை அருகே மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையைத் தொடர்ந்து, தனக்குநெருக்கடி கொடுக்க வருமான வரி சோதனை என்ற அஸ்திரம் ஏவப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பிரமுகரான டாக்டரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications