தமிழக கூடுதல் டிஜிபி மரணம்
சென்னை:
தமிழ்நாடு குற்ற வழக்குகள் இயக்குநரக கூடுதல் டிஜிபி ரவி ஆறுமுகம் சென்னையில் மரணமடைந்தார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்துள்ள ரவி ஆறுமுகம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடல் நலம்பாதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பிற்பகல்மரணமடைந்தார்.
மறைந்த ரவி ஆறுமுகத்திற்கு வயது 58. கடந்த 1972ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். அதிகாரியான ரவிஆறுமுகம் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 1996-97ல் சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பணியாற்றியுள்ளார்.கடைசியாக தமிழ்நாடு குற்ற வழக்குகள் இயக்குநரக இயக்குநராக பணியாற்றி வந்தார்.
சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரவி ஆறுமுகம். மொழியாக்கத்திலும் வல்லமை பெற்றவர். பல்வேறுநூல்களை எழுதியுள்ளார்.
ரவி ஆறுமுகத்தின் தந்தை அய்யம்பெருமாள், தாயார் ஜானகி ஆகியோர் தமிழாசிரியர்கள். இருவரும் ஒரே நாளில்மரணமடைந்தனர். அவரது தம்பி அருண கீதையன் அரசு மன நல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 18ம் தேதிதான் மரணமடைந்தார். ரவி ஆறுமுகத்தின் மனைவி ரமாராணி ஏற்கனவே இறந்து விட்டார்.
மறைந்த ரவி ஆறுமுகத்திற்கு இசைநிலா, யாழினி என ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த பெண் இசைநிலாவுக்குசமீபத்தில் தான் திருமணம் நடந்தது. மற்றொரு பெண் யாழினி மருத்துவம் பயின்று வருகிறார்.
திமுக அனுதாபி என்பதால் தற்போதைய அதிமுக ஆட்சியில் ரவி ஆறுமுகம் முக்கிய பதவி ஏதும் வழங்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி ஆறுமுகத்தின் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications