வந்தார் தனசேகரன்: திமுக-அதிமுக அடிதடி
சென்னை:
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்துடன்கைகலப்பும் ஏற்பட்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சியில் நிதி நிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இன்று அதன் மீதான விவாதம் நடந்தது.இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திமுக கவுன்சிலர் தனசேகரன்மாநகராட்சி கூட்டத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டார். (சென்னை நெரிசல் பலிகள் விவகாரத்தில் குண்டர் சட்டத்தில்தனசேகரன் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்)
தனசேகரன் மாமன்றத்திற்குள் நுழைந்ததும் அவரை வரவேற்கும் விதமாக திமுக கவுன்சிலர்கள் மேசைகளை பலமாக தட்டினர்.திமுகவையும் தனசேகரனையும் வாழ்த்தி வரவேற்றனர்.
அப்போது முகம் சிவந்து போன அதிமுகவை சேர்ந்த சுகுமார் பாபு, தனசேகரன் என்ன தியாகம் செய்து விட்டா சிறைக்கு சென்றார்.42 பேர் உயிர் பலிக்கு காரணமானவர் என்று கூறினார். இதற்கு மற்ற அதிமுக கவுன்சிலர்களும் ஆமோதித்து குரல் எழுப்பினர்.
தனசேகரனை நோக்கி கொலைகாரா கொலைகாரா என்று கோஷமிட்டனர். இதையடுத்து திமுகவினர் முதல்வர்ஜெயலலிதாவையும் அதிமுகவையும் எதிர்த்து கோஷம் போட்டனர்.
இதைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாடா போடாஎன்று திட்டியபடி ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறினர். பிறகு இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனால்அவையில் 45 நிமிடங்களுக்கு மேல் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து அவைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு இரு தரப்பினரும் விலக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைபோல, கராத்தே தியாகராஜன் ஆதரவு கவுன்சிலரான பன்னீர்செல்வமும் பலத்த பாதுகாப்புடன் கூட்டத்தில் கலந்துகொண்டார். அமளி அடங்கிய பின்னர் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
குண்டர் சட்டத்தில் கைதான தனசேகரன் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டதை திமுகவினர் தங்களுக்குக் கிடைத்தபெரும் வெற்றியாகக் கருதுகின்றனர். அவரை ஜாமீனில் விடக் கூறியும், சென்னை நெரிசல் பலிகளுக்கு முழுக் காரணம் தமிழகஅரசு தான் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications