தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள்?
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள் அல்லது வெளி மாநில ஊழியர்களையும் ஈடுபடுத்துவதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 54,912 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 6 ஊழியர்கள்நியமிக்கப்படவுள்ளனர்.தமிழக அரசுத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந் நிலையில் அரசு ஊழியர் சங்கமான என்ஜிஓ சங்கத்தின் தலைவர் சூர்யமூர்த்தி அதிமுகவை மீண்டும்ஆட்சிக்குக் கொண்டு வருவோம் என்று பேசினார்.
இதையடுத்து அரசு ஊழியர்கள் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும் என எச்சரித்துள்ள தேர்தல் ஆணையம்,தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள் அல்லது வெளி மாநில ஊழியர்களையும் ஈடுபடுத்துவது குறித்துபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 4.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அமைக்கப்படவுள்ள 54,912 வாக்குச் சாவடிகளில்சுமார் 7,000 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீசார் தவிர மத்திய போலீஸ் படைகளும் ஈடுபடுத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications