இனிமேல் சினிமாதான்: சரத்குமார் அறிவிப்பு
சென்னை:
இனிமேல் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக நடிகர் சரத்குமார்கூறியுள்ளார்.
இவரை தனிக் கட்சி ஆரம்பிக்குமாறு அவர் சார்ந்த நாடார் சமூகத்தினர் வற்புறுத்திவருகின்றனர்.
இந் நிலையில் சமீபத்தில் நெல்லையில் தனது ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டினார்.அதில் நாடார் சமுதாயத்தினருக்காக குரல் கொடுத்தார்.
திமுகவிலருந்து விலகி தனிக் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்களும், நாடார்சமூகத்தினரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந் நிலையில் சென்னையில் நடந்த இயக்குனர் சேரன் தயாரித்துள்ள அழகாய்இருக்கிறாய், பயமாய் இருக்கிறது படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவில்சரத்குமார் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசுகையில், நடிகர்கள் குறிப்பிட்ட இமேஜுக்குள் சிக்கிக் கொண்டுவிடக் கூடாது. அப்படி சிக்கிக் கொண்டால் வித விதமான கேரக்டர்களில் நடிக்கமுடியாது.
சில சினிமாக் கலைஞர்கள்தான் தாங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயேசெலவிடுகிறார்கள். பிரகாஷ் ராஜ், சேரன் போன்றோர் அவர்களில் சிலர்.
சேரன் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் கூட வாங்கிக் கொள்ளாமல் நடிக்க நான்தயாராக இருக்கிறேன். இனிமேல் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன்.
120 வயது வரை நான் வாழ்வேன். இதை நான் சொல்லவில்லை. ஒரு ஜோதிடர்கூறியிருக்கிறார். தாத்தா வேடம் போடக் கூடத் தயார்.
நான் திமுககாரன் என்றாலும் கூட இந்தி கற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடுஉண்டு. அனைவரும், அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
சினிமா வளர வேண்டும், அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்என்றார் சரத்குமார்.
முதல் கேசட்டை சரத்குமார், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் வெளியிடதயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், ஹென்றி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குனர்கள் சேரன், கேயார், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பரத், அருண்குமார், நடிகைமல்லிகா கபூர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினர்.
சினிமாவில் அதிக கவனம் செலுத்துவேன் என்று அறிவித்துள்ளதன் மூலம் திமுகவில்இருந்து தூர விலகுவேன் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார் குமார்.












Click it and Unblock the Notifications