புரளி கிளப்பும் உளவுத்துறை: விஜயகாந்த் புலம்பல்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாக உளவுத்துறையினர் புரளிகிளப்பி வருகின்றனர். மக்களை நம்பி, நான் தனியாகத்தான் போட்டியிடுகிறேன் என்றுதேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் அவர் மேற்கொண்ட பிரசாரத்தின்போது, நான்ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதாக உளவுத் துறையினர் புரளிகிளப்பி வருகின்றனர்.

அதை யாரும் நம்ப வேண்டாம். எனது கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது.

மக்களை நம்பித்தான் நான் களத்தில் நிற்கிறேன், மக்கள் பலமே எனது பலம். மக்கள்சக்தியைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன்.

மற்றவர்களுக்கு பண பலம் உள்ளது. ஆனால் உங்களது பலத்தில்தான் நான்நிற்கிறேன்.

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழியும், மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள்உருவாகும். படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் செய்ய தாராள கடன் வழங்கநடவடிக்கை எடுப்பேன். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.

இதெல்லாம் முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி கேட்பது முட்டாள்தனம்.முடியும் என்பது அறிவாளிகளின் செயல். ஒரு முறை என்னை கோட்டைக்கு அனுப்பிவையுங்கள்.

அடுத்து என்னை 50 கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் வீழ்த்த முடியாதுஎன்றார் விஜயகாந்த்.

இதற்கிடையே விஜய்காந்த் பணத் தட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்த பாஜக,அவருக்கு உதவ முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே விஜய்காந்தை கட்சிக்குள் இழுக்க அல்லது அவருடன்கூட்டணி அமைக்க பாஜக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னையில் பிரசாரம்:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் சென்னையில் இன்றுநடைபெறுகிறது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார்.

தேமுதிகவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை தமிழகம் முழுவதும் படு விறுவிறுப்பாகமேற்கொண்டுள்ளார் விஜயகாந்த். தென் மாவட்டங்களை ஒரு சுற்று சுற்றி விட்டவிஜயகாந்த், வட மாவட்டங்களில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வேலூர்மாவட்டத்தில் 3 நாள் பிரசாரம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலும் பிரசாரம்மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அரசியல்பிரபலம் பெற்ற மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் இன்று அவரது கட்சியின்பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலைநடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+