நெருக்கும் கழகங்கள்; திணறும் நரேஷ்குப்தா!

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

திமக மற்றும் அதிமுகவின் தொடர் நெருக்குதல் காரணமாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விழி பிதுங்கிக் காணப்படுகிறார்.

தேர்தல் நேரத்தில் அதிக அவஸ்தைக்குள்ளாவது வாக்காளர்கள் மட்டுமல்ல! தேர்தல்ஆணையமும்தான். குறிப்பாக தமிழக தேர்தல் ஆணையம்தான் ஏகப்பட்டதலைவலியை சந்திக்கும். இந்தத் தேர்தலிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அதிமுவுக்கு சாதகமாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாசெயல்படுவதாக திமுகவும், சரியாக ஒத்துழைப்பதில்லை, எதிர்க்கட்சிகளுக்குசாதகமாக நடக்கிறார் என்று அதிமுகவும் குப்தாவின் தலையை உருட்டிக்கொண்டிருக்கின்றன.

குப்தாவின் அலுவலகத்திற்கு திமுக மற்றும் அதிமுகவிடமிருந்து தினசரி குறைந்தது50 புகார்களாவது வந்து குவிந்து கொண்டிருக்கிறதாம். இதுதவிர பல்வேறு கட்சிகள்,அமைப்புகள் உள்ளிட்டவையும் மனுக்களை அனுப்பி குப்தாவை திணறடித்துவருகின்றன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியதிலிருந்தே, தேர்தல்ஆணையத்தின் மீது புகார் பட்டியலை வாசிக்கத் தொடங்கி விட்டது திமுக. தேர்தல்ஆணையம் யாருடைய நெருக்குதலுக்கும் பணியாது, வாக்காளர் பட்டியல் திருத்தம்நடுநிலையோடு செயல்படுத்தப்படும் என குப்தா அறிவித்தும் திமுக நம்பத் தயாராகஇல்லை.

திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்சந்தேகத்திற்குரியவையாக உள்ளன. நாங்கள் சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்று வெளிப்படையாகவே அதிருப்தியைத்தெரிவித்தார்.

மறுபக்கம், அதிமுகவும் தன் பங்குக்கு தேர்தல் ஆணையம் மீது புகார்களை சுமத்திவருகிறது. மத்திய காங்கிரஸ் அரசின் நெருக்குதலுக்குப் பணிந்து குப்தாசெயல்படுவதாக அது புகார் கூறுகிறது.

இப்படி இருமுனைத் தாக்குதலுக்கு ஆளாகி விழி பிதுங்கி நிற்கும் நரேஷ் குப்தா,தனக்கே உரிய பொறுமை, பொறுமை, பொறுமையுடன் தனது பணிகளைக் கவனித்துவருகிறார்.-

தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை!

இந் நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன், ஆணையர்கள்கோபாலசாமி, நவீன் சாவ்லா ஆகிய மூன்று பேரும் புதுவையில் இன்று முகாமிட்டு,அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

நாளை முதல் 2 நாட்களுக்கு 3 ஆணையர்களும் தமிழகத்தில் ஆய்வுமேற்கொள்கின்றனர்.

சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக நடந்துவருகின்றன. இந் நிலையில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 3ஆணையர்களும் புதுவை வந்துள்ளனர்.

இன்று பிற்பகல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

இதைத் தொடர்ந்து நாளை தமிழகம் வரும் தேர்தல் ஆணையர்கள், கட்சிப்பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

தேர்தல் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள்.

சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களுக்கு தேர்தல் ஆணையர்கள்செல்லவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+