பட்டம் கழுத்தை அறுத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி!
சென்னை:
சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் பொறியாளர்வாலிபரின் கழுத்தை, வானில் பறந்த பட்டத்தின் கயிறு அறுத்ததால் சம்பவஇடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இப்படிப் பட்டம் விடுவதில் சிறுவர்களுக்கு நிகராக வாலிபர்களும் அதிக ஆர்வம்காட்டுகின்றனர்.
பிரச்சினை என்னவென்றால், பட்டம் விடப் பயன்படும் கயிறுதான்!
இந்தக் கயிறு சாதாரணக் கயிறாக இருந்து விட்டால் பரவாயில்லை, ஆனால் எமனின்பாசக் கயிற்றுக்கு ஈடாக மிகவும் அபாயகரமான கயிறுகள்தான் பட்டம் விடபயன்படுத்தப்படுகிறது.
இதனால் ஆண்டுதோறும் சில உயிர்களை இந்த பட்டக் கயிறுகள் பறித்து வருகின்றன.
பட்டம் விடப் பயன்படுத்தப்படும் கயிற்றை மாஞ்சா கயிறு என்பார்கள். இதில்வஜ்ஜிரம், கண்ணாடித் தூள் ஆகியவற்றைக் கலந்து பசை போல மாற்றி அதை நூலில்தடவி விடுகிறார்கள்.
இதனால் நூல் படு உறுதியாக மாறி விடுகிறது. கிட்டத்தட்ட கம்பி போல் மாறிவிடும்.
இப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் பட்டங்களை வானில் அறுக்க முடியும்.
இப்படிப்பட்ட மாஞ்சா கயிற்றுக்கு சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர்பரிதாபமாக இறந்துள்ளார்.
கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் கோதண்டராமன். கம்ப்யூட்டர்பொறியாளரான கோதண்டராமன், எம்.பி.ஏ. படித்தவர். இவர் புதுவையிலிருந்துசென்னைக்கு வந்திருந்த தனது அண்ணன் பட்டாபிராமனை திருவல்லிக்கேணியில்உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
சாமி கும்பிட்டு விட்டு பட்டாபிராமன் புதுவை திரும்பினார். அரை வழியனுப்பிவிட்டுகோதண்டராமன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஜெமினி மேம்பாலம் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது திடீரென பறந்து வந்தஒரு பட்டத்தின் கயிறு கோதண்டராமனின் கழுத்தை இறுக்கிச் சுற்றியது. இதைஎதிர்பாராத கோதண்டராமன் நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.
கழுத்தை சுற்றிய கயிறை அறுக்க அவர் கடுமையாக முயன்றார். ஆனால்முடியவில்லை.
கோதண்டராமன் உயிருக்குப் போராடுவதைகூடி நின்று, சென்னை மாநகர பொதுஜனங்கள் வேடிக்கைதான் பார்த்தனரே தவிர யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான் இங்கே கொடுமையிலும் கொடுமை.
ஆனால் அந்த வழியே வந்த நல்ல மனம் படைத்த ஒரு ஆட்டோ டிரைவர்கோதண்டராமனை மீட்டு தனது ஆட்டோவில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குவிரைந்தார்.
ஆனால் வழியிலேயே கோதண்டராமன் கழுத்து அறுபட்டு, ரத்தம் வழிந்து, மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் கோதண்டராமனின் குடும்பத்தினரும், உறவினர்களும்மருத்துவமனைக்கு விரைந்து வந்து கதறி அழுதனர்.
தம்பியின் மரணம் குறித்து புதுவைக்கு பஸ்சில் போய்க் கொண்டிருந்தபட்டாபிராமனுக்கும் தகவல் போய் அவரும் சென்னைக்குத் திரும்பி வந்து கதறித்துடித்தார்.
கோதண்டராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கோடை காலமும், கொலைகார பட்டம் விடுதலும் தொடங்கி விட்டதால் காவல்துறைஉரிய நடவடிக்கை எடுத்து பட்டம் விடுவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
பட்டம் விடுகிறோம் என்று கூறிக் கொண்டு ரவுடிகளும், நன்கு வளர்ந்த வாலிபர்களும்மஞ்சா கயிறை தயார் செய்து கொண்டு வானில் சண்டை போட்டு உயிர்களைப் பறிக்கஆரம்பித்துவிட்டதால் சென்னையில் வாகனங்களில் செல்லும் யாருக்குமேபாதுகாப்பில்லாத நிலை உருவாகி வருகிறது.












Click it and Unblock the Notifications