நடராஜை மாற்ற தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவு
டெல்லி
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்யும்படி தமிழகஅரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசிய காவல்துறை ஆணையர் நடராஜைஇடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்துதமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்றுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் தேர்தல் கமிஷனுடன் பேசி இந்தவிவகாரத்துக்கு தீர்வு காண தமிழக அரசு முன் வர வேண்டும் என உயர் நீதிமன்றம்அறிவுறுத்தியது.
ஆனால், அதை தமிழக அரசு மதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசுஎந்த ஆலோசனையும் நடத்த நடவடிக் எடுக்கவில்லை.
இதையடுத்து நடராஜ் மாற்றத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்யுமாறு தமிழக அரசுக்குதேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள ஒரு உத்தரவில்,சென்னை மாநகர ஆணையர் நடராஜ் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
அவருக்குப் பதில் புதிய ஆணையரை நியமிப்பதற்கு வசதியாக மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வரும் 18ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ள நிலையில்,மீண்டும் ஆணையர் விவகாரத்தை தேர்தல் ஆணையம் தூசி தட்டி எடுத்துள்ளது புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications