விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலே இனிதான்.. கர்நாடகா வைத்த செக்.. வசமாக சிக்கிட்டாரே.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர்ப் பங்கீட்டில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான கூட்டத்தில், தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என ஆணையம் அதிரடியாகத் தெரிவித்துவிட்டது.

ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் அதிர்ச்சியில் இருந்த தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும், இந்த முடிவு மேலும் பேரிடியாக இறங்கியுள்ளது.

Cauvery

காவிரி ஆணையக் கூட்டத்தில் நடந்தது என்ன?

டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கர்நாடகாவில் போதிய மழை பொழியவில்லை என்றும், அம்மாநிலத்தில் உள்ள காவிரி படுகை அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கர்நாடக அரசு பிரதிநிதிகள் வாதிட்டனர்.

அணைகளில் உள்ள நீரை பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் 1 முதல் கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரை உடனடியாகப் திறந்துவிட வேண்டும் என வாதிட்டபோதிலும், ஆணையம் எவ்வித உறுதியான உத்தரவையும் பிறப்பிக்காமல் கூட்டத்தை முடித்துக் கொண்டது.

நிலைமையை ஆய்வு செய்ய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு வரும் ஜூலை 28 அன்று மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரமும் குடிநீர் அபாயமும்

ஜூன் 12-ஆம் தேதி வழக்கமாகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால் இதுவரை திறக்கப்படவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், காவிரியை மட்டுமே நம்பியிருக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகள் முடங்கியுள்ளன.

இதுமட்டுமன்றி, காவிரி ஆற்றுப் படுகையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சை முதல் திண்டுக்கல், ராமநாதபுரம் வரை பல தென் மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.

கோதாவில் இறங்கும் முதல்வர் விஜய்:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த நிலைப்பாடு விஜய்க்கு பிரஷராக மாறும் சூழல் உள்ளது. சட்ட ரீதியாக விஜய்க்கு பெரிய அழுத்தமாக மாறும் சூழல் உள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீரை உடனடியாகக் கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக்கோரி அவசர மனுத் தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இக்கட்டான இந்தச் சூழலைப் பயன்படுத்தி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முயற்சிப்பதைத் தடுக்க சட்டப் போராட்டத்தை வலுப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
.
மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் மாற்று நீர் ஆதாரங்களை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

காவிரி உரிமையை மீட்டெடுக்கவும், குடிநீர் மற்றும் விவசாயப் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து சட்டப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+