திமுக வேட்பாளரை இறக்கிவிட்ட குதிரை!
திருநிெல்வேலி:
நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் மலைராஜா குதிரை மீது ஏறி வாக்கு சேகரிக்கச்சென்றார். ஆனால் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் குதிரை நகர மறுத்ததால்அதிலிருந்து இறங்கி நடந்தே சென்று ஓட்டு கேட்டார்.
தேர்தல் நேரத்தில் ஏகப்பட்ட அக்கப்போர்களைப் பார்க்கலாம். அதுமாதிரியான ஒருவித்தியாசமான அனுபவத்தை நெல்லை தொகுதி வாக்காளர்கள் நேரில் பார்க்கும்பாக்கியம் கிடைத்தது.நெல்லை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலைராஜா. இவரைவித்தியாசமான முறையில் அழைத்துச் சென்று வாக்கு சேகரிக்க திமுகவினர் முடிவுசெய்தனர்.
தீவிரமாக யோசித்துப் பார்த்த அவர்கள் குதிரையில் மலைராஜாவை அமர வைத்துவாக்கு கேட்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
உடனடியாக ஒரு குதிரை வரவழைக்கப்பட்டது. மார்வாடிகள், இஸ்லாமியர்களின்திருமணங்களில் மாப்பிள்ளையைக் கூட்டி வர பயன்படுத்துவார்களே அந்தக் குதிரைதான் வரவழைக்கப்பட்டது.
வெள்ளை கலரில், கொல் பார்த்து பல நாள் ஆன, நோஞ்சானாக அந்தக் குதிரை மீதுதிமுக கொடி போர்த்தப்பட்டது. ஜோரான அலங்காரங்களுடன் குதிரை தயாராகநிறுத்தி வைக்கப்பட்டது.
குதிரைக்கு அருகில் தாரை, தப்பட்டைகளுடன் ஒரு குழு வாத்திய இசையை முழங்கத்தொடங்கியது. அதுவரை அமைதியாக இருந்த குதிரை, மேள சத்தத்தைக் கேட்டவுடன்மிரளத் தொடங்கியது.
அதை தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தினர் அருகில் இருந்த திமுகவினர் மற்றும்குதிரைக்கு சொந்தக்காரர்.
ஒரு வழியாக மாப்பிள்ளை மலைராஜா வந்து சேர்ந்தார். அவரை குதிரையில் ஏற்றிஅமர வைத்தனர். ரொம்பக் கஷ்டப்பட்டு அமர்ந்த மலைராஜா, பிரசாரத்திற்குத் தயார்என பச்சைக் கொடி காட்ட, மேள தாள கோஷ்டியினர் முன்னே நடக்க குதிரையைதட்டி நடக்கச் செய்தனர்.
ஆனால் குதிரை நகரவில்லை. மேள தாள கோஷ்டி இதைக் கவனிக்காமல் ரொம்பதூரம் நடந்து போய்விட்டனர்.
வெறுமனே கனைப்பை மட்டுமே கொடுத்த குதிரை அப்படியே நின்ற இடத்திலேயேஇருந்தது. இதனால் குதிரை மீது அமர்ந்திருந்த மலைராஜா நெளியத் தொடங்கினார்.
வேட்பாளரை விட்டுவிட்டுப் போனதை உணர்ந்த வாத்திய கோஷ்டியும் திரும்பிகுதிரையை நோக்கி ஓடி வந்தது.
குதிரை நகர மறுப்பதையும் பொதுமக்கள் எல்லோரும் தன்னையே பார்த்து பல் காட்டிசிரிப்பதையும் கண்ட மலைராஜா வெட்கப்பட்டு என்னப்பா ஆச்சு என்று கீழேஇருந்தவர்களிடம் கேட்டார். இதோ கிளம்பிரும்ணே என்று கூறிய அவர்கள்குதிரையை நகர வைக்க படாதபாடு பட்டனர்.
ஆனால் குதிரை அசையவே இல்லை. இதையடுத்து வெறுத்துப் போன மலைராஜா,குதிரையிலிருந்து கீழே குதித்தார்.
பின்னர் நடந்தே போகலாம் என்று கூறிய அவர் விடுவிடுவென நடந்து சென்று வாக்குசேகரிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்,
மலைராஜா தன் மீதிருந்து கீழே இறங்கிய அடுத்த விநாடியே, குதிரை படு ஜோராகநடக்கத் தொடங்கியது.
கடுப்பாகிப் போன (குதிரைக்கு காசு கொடுத்த) திமுகவினர் என்னய்யா குதிரைவளர்த்து வச்சுருக்கே என்று குதிரைக்கு சொந்தக்காரரை ஒரு ஏறு ஏறி விட்டுமலைராஜாவுடன் நடையைக் கட்டினர்!












Click it and Unblock the Notifications