10 கிலோ அரிசி இலவசம்-அம்மா அறிவிப்பு!
சென்னை:
ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வாங்கும் போது, அதில் 10கிலோ அரிசிஇலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக பலமிக்கதாகவும் திமுக கூட்டணி சற்று பின்தங்கியும் இருந்தது. ஆனால், திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்நிலைமை தலைகீழானது.ஏழைகளுக்கு இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு ரேசனில் அரிசி, நிலமற்ற விவசாயக்கூலிகளுக்கு இலவச நிலம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அதிரடிஅறிவிப்புகள் அதிமுகவை பின் தள்ளிவிட்டன.
திமுக தலைவர் கருணாநிதியின் பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் பெருகியது. அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா போகும் இடம் எல்லாம் கட்சி நிர்வாகிகள் திட்டுவாங்கும் அளவுக்கு கூட்டம் சிறுத்துப் போனது.
மேலும் திமுகவின் அறிவிப்புகள் கீழ்மட்ட மக்களிடையே மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அதிமுகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்உளவுப் பிரிவினர் ஜெயலலிதாவை எச்சரித்துள்ளனர்.
இதையடுச்து திமுகவின் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்பதை கெளண்டர் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.
இந் நிலையில் திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் ஒரு அறிவிப்பை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தான் போட்டியிடும் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அங்குள்ளஎம்.ஜி.ஆர் சிலை அருகே இருந்தபடி ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசினார்.
வழக்கமாக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் எம்ஜிஆரை ஜெயலலிதா வசதியாகமறந்துவிடுவார். தேர்தல் வரும்போது மட்டுமே அவர் பெயரைப் பயன்படுத்துவார்.இந்த முறையும் அதே கதை தொடர்கிறது.
எம்ஜிஆர் சிலை அருகே பேசிய ஜெயலலிதா,
அம்மா (ஜெயலலிதா) ஆண்டிப்பட்டிக்கு வந்தால் சும்மாவா வருவாங்க? உங்களுக்குஒரு இனிமையான செய்தியை சொல்லப் போகிறேன்.
நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது மாதம்தோறும் 20கிலோ அரிசி, கிலோ ரூ. 3.50க்கு வழங்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஆதரவுடன், உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி மீண்டும் அமைந்தால்நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசியில் 10 கிலோஅரிசி ரூ. 3.50 என்ற விலைக்கும்,
மீதம் 10 கிலோ அரிசி இலவசமாகவும் வழங்கப்படும்.
மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். 20 கிலோ அரிசியில் 10 கிலோ அரிசிஇலவசமாக வழங்கப்படும். இதய தெய்வம் எம்.ஜி.ஆர். சிலை முன்பு நின்று இந்தவாக்குறுதியை அளிக்கிறேன்.
இந்தத் திட்டத்தால் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களில் அரிசி பெறும்அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்றார் ஜெயலலிதா.
தற்போது ரேஷன் கடைகள் மூலம் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ரூ. 3.50ஆகும். அதன்படி 20 கிலோ அரிசி ரூ. 70 ஆகும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கிலோ அரிசி ரூ. 2க்கு விற்றால் 20 கிலோஅரிசி ரூ. 40 ஆகும்.
ஆனால் தற்போது ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி பார்த்தால் ரூ.35க்கு 20 கிலோ அரிசி வாங்க முடியும். அதாவது கிலோ அரிசி ஒன்னேமுக்கால்ரூபாயாக இருக்கம்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை கெளண்டர் செய்ய, சோறு சமைத்துத் தரவீட்டுக்கு வீடு ஆள் அனுப்புவோம் என்று திமுக அறிவிக்காமல் இருந்தால் சரி.
அப்புறம் பதிலுக்கு சாப்பாடு ஊட்டி விட வீட்டுக்கு வீடு ஆள் அனுப்புவோம் எனஜெயலலிதா அறிவிப்பார்...












Click it and Unblock the Notifications