ரூ. 50 கோடிக்கு ராதிகா நிறுவனத்தை விலை பேசும் ரிலையன்ஸ்!
சென்னை:
சரத்குமாருடன் ராதிகாவும் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் சன் டிவியில் அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகள்தொடருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
தங்கவேட்டை, செல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள், தொடர்களை ராதிகாவின் ராடன் டிவி நிறுவனம் சன் டிவியில்ஒளிபரப்பி வருகிறது.அப்பா அப்பா என்று வாய்க்கு வாய் திமுக தலைவர் கருணாநிதியை அழைத்து வந்தராதிகா, கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில் குமார்கூறுகையில்,
நாளைய தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் அமையவே முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவரானஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தேன். குடும்ப அரசியல் நடத்தாத சிறந்த தலைவராகஜெயலலிதாவைக் காண்கிறேன்.
ராதிகா நடத்தும் ராடன் டிவி ஒரு கார்பொரேட் நிறுவனம். அது போல சன் டிவியும் கார்பொரேட் நிறுவனம்.ராதிகாவின் தொடர்கள் சன் டிவியில் தொடர்வதா இல்லையா என்பது ராதிகாவும் கலாநிதி மாறனும் பேசி முடிவுசெய்ய வேண்டிய விஷயம்.
அரசியல் வேறுபாடு காரணமாக கலாநிதிக்கும் ராதிகாவுக்கும் இடையே பிரச்சனை எனலாம். இது தொடர்பாகசில பத்திரிக்கைகள் திட்டமிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதை ஒரு சதி என்று நான் கருதுகிறேன்என்றார்.
சன் டிவி நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றும் எண்ணம் உள்ளதா என்று ராதிகாவிடம் கேட்டதற்கு அவர்பதிலளிக்கையில்,
அது சன் டிவியைப் பொறுத்தே அமையும். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து தான் எங்கள் முடிவும்இருக்கும் என்றார்.
அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு,
நான் சில ஆண்டுகளாகவே எந்தக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை. நான் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.என் கணவருக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருடன் முதல்வர் ஜெயலலிதாவைசந்திக்க வந்தேன் என்றார்.
ராடன் டிவி என்று தனி சேனல் ஆரம்பிக்கும் திட்டமுள்ளதா என்று கேட்டதற்கு,
ராதிகாவும் குமாரும் பதிலளிக்கவில்லை. சிரித்தபடியே சென்றுவிட்டனர். ராதிகாவை வைத்து டிவி ஆரம்பிக்கஒரு விவிஐபி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.
விலை பேசும் ரிலையன்ஸ்:
இதற்கிடையே ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தை ரூ. 50 கோடிக்கு விலைக்கு வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
ராடான் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 40 கோடியாகும். இதனை ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்க முன் வந்துள்ளதாம். ரூ. 50 கோடிவரை விலை பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ராதிகா இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிகிறது.
இந்த பேரம் பேசும் வேலைகள் எல்லாம் ராதிகா அதிமுகவில் சேருவதற்கு முன்பு ஆரம்பமானவை என்றும் சொல்கிறார்கள்.
சரத்குமாரின் நடவடிக்கைகளால் சன் டிவி தரப்பிலிருந்து ராதிகாவுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் வர ஆரம்பித்தபோது ரிலையன்ஸ் நிறுவனம் ராதிகாவைஅணுகியதாக கூறப்படுகிறது.
சன் டிவி தவிர அதன் மலையாள டிவியான சூர்யாவிலும் தெலுங்கு சேனலான ஜெமினி டிவியிலும் கன்னட சேனலான உதயாவிலும் பல்வேறு தொடர்கள்கேம் ஷோக்களை நடத்தி வருகிறார் ராதிகா.
சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து தங்க வேட்டையை நடத்தும் ராதிகா, மலையாளத்தில் நடிகை ஊர்வசியையும், கன்னடத்தில் நடிகைவிஜயலட்சுமியையும் வைத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் ஒளிபரப்பாகும் தங்க வேட்டை நிகழ்ச்சியை ராதிகாவே தொகுத்து வழங்குகிறார்.
சன் டிவி குழுமத்திற்கு இதுவரை 12க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கி வந்துள்ளது ராடான் நறுவனம். அதில் சித்தி, அண்ணாமலை, சின்னப்பாப்பாபெரியபாப்பா தொடர்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை.
மேலும் கடந்த சில வருடங்களாகவே இரவு 9.30 மணி ஸ்லாட் ராடான் நிறுவனம் வசமே உள்ளதும் பல்வேறு டிவி தொடர் தயாரிப்பாளர்களை பெரும்எரிச்சலுக்குள்ளாக்கிய விஷயங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடியும் வரை ராதிகா விஷயத்தில் சன் டிவி நிறுவனம் எந்த முடிவையும் எடுக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications