ஜெவின் மயக்க பிஸ்கட்: ராமதாஸ் நக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரயிலில் மயக்க பிஸ்கெட் தந்து பயணிகளிடம் நகை, பணத்தை திருடிச் சென்றார்கள்என்று நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோமே.. அதே வேலையைத் தான் முதல்வர்ஜெயலலிதாவும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

திமுகவின் மலிவு விலை அரிசித் திட்டத்திற்குப் போட்டியாக 10 கிலோ அரிசிவாங்கினால் 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

அவருக்கு வந்துவிட்ட தோல்வி பயமே இதற்குக் காரணம். இதுவே திமுக அணிக்குக்கிடைத்த தல் வெற்றியாகும்.

ஒரு சந்து முனையில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத புதிய வாக்குறுதியை அளித்துள்ளதன் மூலம்தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளார் ஜெயலலிதா.

2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நிலையை சரிப்படுத்த கசப்பு மருந்து தருகிறேன்என்று கூறி ஏகப்பட்ட வரிகளைப் போட்டு மக்களை வாட்டினார் ஜெயலலிதா.

இப்போது இலவச அரிசி என்று கூறி மயக்க பிஸ்கட் கொடுத்து மக்களை மயக்கப்பார்க்கிறார். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+