For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போதைக்கு பேச்சு சாத்தியமில்லை: புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

ஜெனீவாவில் வரும் 24ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இயலாதுஎன நார்வே தூதர் ஜான் ஹன்சன் பெளயரிடம் விடுதலைப் புலிகள் தெரிவித்துவிட்டனர்.

Jon arriving at Kilinochi

அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடரச் செய்யும் முயற்சியாக நார்வே சிறப்புத் தூதர் ஜான் இன்று விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கிளிநொச்சி வந்தடைந்தார்.

தமிழ்ச்செல்வன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் உள்ளிடோருடன் அவர் ஆலோசனைநடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ச்செல்வன்,

இலங்கை அரசும் ராணுவமும் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் குறித்தும், அதனால் அமைதிப்பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்க ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நார்வே தூதரிடம் விளக்கிவிட்டோம்.

Norway team with LTTE political wing leaders

திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி பேச்சுவார்த்தைகளில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்பதைக்கூறிவிட்டோம். இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசுவதாக நார்வே தூதர் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுக்குப் பின்னர் ராணுவத்தாலும், பாரா மிலிட்டரிப் படையினராலும்தமிழர் பகுதிகளில் வன்முறையும் இனப் படுகொலையும் தீவிரப்படுத்தப்பட்டுவிட்டது. இலங்கை அரசுத் தரப்பில்இருந்து போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறப்பட்டுவிட்டது.

இதனால் மக்கள் கொந்தளிப்பை நாங்கள் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.

முதலில் தமிழர் பகுதியில் அரசு ஆதரவுப் படையினராலும், ராணுவத்தாலும் நடத்தப்படும் வன்முறைகள்முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இரு தரப்பும் வன்முறையை நிறுத்த வேண்டும் என நார்வே குழுவினர்தெரிவித்தனர்.

100 சதவீதம் போர் நிறுத்த ஒப்பதந்தை கடைபிடிக்கவும், ஒத்துழைக்கவும் நாங்கள் தயார். ஆனால், நிலைமைமோசமானதற்கு இலங்கை அரசும் படைகளுமே காரணம்.

வன்முறைகளாலும் கொலைகளாலும் தமிழ் மக்கள் ஆத்திரமுற்று, கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.இதனால் அரசு தான் முதலில் தனது செயல்களை நிறுத்த வேண்டும்.

Tamilchelvan

எங்களது கிழக்குப் பிராந்திய தளபதிகள், போராளிகள் கிளிநொச்சிக்கு வந்து எங்கள் தலைமையை சந்தித்தபின்னரே ஜெனீவா பேச்சு குறித்து முடிவெடுக்க முடியும். ஆகவே முதலில் எங்கள் தளபதிகள் எங்கள் தலைவரைசந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நார்வேயிடம் வலியுறுத்தினோம்.

எங்கள் கிழக்குப் பகுதி தளபதிகள் கிளிநொச்சிக்கு வர 100 சதவீத பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இதுவரை இருந்த போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்கமைப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றதைஏற்க மாட்டோம்.

தனியார் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிப்பில் உள்ள சிக்கல்களை நார்வேகுழுவிடம் விளக்கிவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை போர் நிறுத்த ஒப்பந்த்தை மதிப்பதில் நேர்மையாகவேஇருக்கிறோம்.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மீண்டும் ஈடுபட வேண்டுமானால் அரசு தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். எங்கள் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை இலங்கை ராணுவம் கைவிட வேண்டும்என்றார் தமிழ்ச்செல்வன்.

நேற்று நார்வே தூதர் ஜான், இலங்கைப் பிரதமர், வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். அதிபர்ராஜபக்ஷேவை அவரால் சந்திக்க முடியவிவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X