கதர் ஊழியர்கள் நீக்கம் செல்லாது-உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் 862 பேரை தமிழக அரசின் டிஸ்மிஸ் செய்ததுசெல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகலில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஊழியர்களை தமிழகஅரசு கட்டம் கட்டி வீட்டுக்கு அனுப்பியது. அதில் தமிழக அரசின் கதர் கிராம வாரியத்தொழில்துறை ஊழியர்களும் தப்பவில்லை.

இதில் பணியாற்றி வரும் 862 பேரை பணிநீக்கம் செய்ய கடந்த 2003ம் ஆண்டுதமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.முதல் கட்டமாக 97 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து 97 பேரும், டிஸ்மிஸ் செய்வது தொடர்பானஅரசாணைக்கு தடை கோரி எஞ்சிய ஊழியர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்தது. இந் நிலையில் இவ்வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில்,

தமிழக அரசின் அரசாணை செல்லாது. 862 ஊழியர்களையும் நீக்கும் அரசாணையைசெயல்படுத்தக் கூடாது. டிஸ்மிஸ் செய்த 97 பேருக்கும் 4 வாரங்களுக்குள் மீண்டும்வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+