சோனியா பிரசாரத்தில் விதிமீறல்-திமுக, காங்.பாமகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட தேர்தல்பிரசாரத்தின்போது விதிமீறல் நடந்துள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திமுக,பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த 25ம் தேதி மின்னல் வேகப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.முதலில் புதுவை சென்று பேசிய அவர் பின்னர் மதுரை சென்றார். அங்கு நடந்தகூட்டத்தில் உரையாற்றிய பின்னர் சென்னை திரும்பி, தீவுத் திடலில் நடந்தகூட்டத்திலும் பேசினார்.
சென்னை கூட்டத்தில் கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். சோனியாவின் பிரசாரத்தை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையபார்வையாளர் ஒருவரும் சோனியாவின் சுற்றுப் பயணத்தின்போது கூடவேசென்றிருந்தார்.
அவர் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,சோனியாவின் வாகனத்திற்குப் பின்னார் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைஏந்தியபடி 228 வாகனங்கள சென்றன.
விதிமுறைப்படி மூன்று வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால்சோனியாவின் வாகனத்திற்குப் பின்னால் திமுக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் அதிகஅளவில் வாகனங்களில் வந்ததன் மூலம் விதிமுறையை மீறி விட்டன.
இதேபோல திருச்சியில திமுக தலைவர் கருணகாநிதி மேற்கொண்டபிரசாரத்தின்போதும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இவை தொடர்பாக உரியவிளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு தேர்தல்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 1ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications