இலங்கை: மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு
கொழும்பு:
கிழக்குப் பகுதியில் உள்ள தனது கமாண்டர்களை வன்னி பகுதிக்கு அழைத்து வர சீ-பிளேனைப் (கடலில்தரையிறங்கும் விமானம்) பயன்படுத்திக் கொள்ளலாம் என விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசு யோசனைகூறியுள்ளது.
இந்த யோசனையை புலிகள் ஏற்பார்கள் என்று தெரிகிறது.முன்பு புலிகளின் கிழக்குப் பகுதி கமாண்டர்களை வடக்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல ராணுவஹெலிகாப்டர்களைத் தந்து வந்தது இலங்கை அரசு. ஆனால், ராஜபக்ஷே அதிபரான பின்னர் அந்த வசதிபடிப்படியாக மறுக்கப்பட்டது.
இதையடுத்து கடல் மார்க்கமாக அவர்களை அழைத்து வர புலிகள் முயன்றனர். ஆனால், அந்தப் படகுகளைபோர்க் கப்பல்கள் மூலம் இலங்கை கடற்படை மிரட்டியதால் அந்தத் திட்டத்தை புலிகள் கைவிட்டுவிட்டனர்.
மேலும் கிழக்கு கமாண்டர்களை சந்திக்க முடியாத வரை மீண்டும் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என புலிகள்தலைமை அறிவித்துவிட்டது. இந் நிலையில் தத் கொழும்பு ராணுவ தலைமையகத்தில் குண்டு வெடிப்பும் தமிழர்பகுதிகளில் இலங்கை விமானப் படை குண்டு வீச்சும் நடந்தது.
இந்தத் தாக்குதல் போராக வெடித்துவிடாமல் தடுக்க நார்வே தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இருதரப்பினருமே போர் நிறுத்தத்தைக் கடைபிடிப்பதல் தீவிரம் காட்டுவதையடுத்து இருவரையும் விரைவில்பேச்சுவார்த்தைக் கொண்டு செல்ல நார்வே முயன்று வருகிறது.
இந் நிலையில் சீ பிளேன்களைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை இலங்கை கூறியுள்ளது. அதை புலிகள்ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து நார்வேயுடன் பேசப்படும் எனபுலிகளின் செய்திப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
இந்த விமானம் கிழக்குப் பகுதியில் கடலில் இருந்து கிளம்பி வடக்கில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடலில்இறங்குவதா அல்லது ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இறங்குவதா என்ற சிக்கல் எழுந்துள்ளது. அதுகுறித்து நார்வே இரு தரப்பிடமும் பேசி வருகிறது.












Click it and Unblock the Notifications