ஜெயாவின் திருட்டு விசிடி: ப.சி தாக்கு

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் கடந்து ஐந்து ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் வெகுவாக குறைந்துவிட்டன என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நாடு முழுவதும் நான்கரை லட்சம் கோடி அளவுக்கு புதிய தொழில் முதலீடுகள்செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடு எதுவுமே இல்லை.

இங்கு முதல்வரை யாராலும் எளிதில் சந்திக்க முடிவதில்லை. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களையும் முடக்கி வைத்து விட்டார்கள். இதனால் முக்கிய நிறுவனங்கள்எதுவும் முதலீடு செய்ய முன் வரவில்லை.

வாட் வரி விதிப்பை அத்தனை மாநிலங்களும் அமல்படுத்தி விட்டன. ஆனால்தமிழகம் மட்டும் பிடிவாதமாக இதை அமல்படுத்தாமல் உள்ளது. இந்த நிலைநீடித்தால், இங்கு இருக்கிற பல நிறுவனங்களும் கூட வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விடும் அபாயம் உள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. திமுக தனித்து ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்றார்சிதம்பரம்.

முன்னதாக தாம்பரத்தில் பேசிய சிதம்பரம்,

ஜெயலலிதாவின் ஆணவப் போக்கு காரணமாக மக்களவைத் தேர்தலில் அவருக்குஜீரோ மார்க் போட்டீர்கள். அதன் பிறகும் அவர் திருந்தவில்லை. அந்தப் பெரும்தோல்விக்கு பொறுப்பேற்று ஜெயலலிதா விலகியிருக்க வேண்டாமா?

பீகார், ஒரிஸ்ஸா என்றால் வன்முறை மூலம் அரசைக் கவிழ்த்திருப்பார்கள். தமிழகமக்கள் அமைதி காத்தீர்கள்.

நல்ல காரியம் எதையும் ஜெயலலிதாவுக்கு சுயமாகச் செய்யத் தெரியாது. இதனால்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கிறார். இதுவும் கிட்டத்தட்டதிருட்டு விடிசி மாதிரி தான்.

இதனால் திருட்டு விசிடியைப் பிடிக்கும் போலீசார் ஜெயலிலதாவின்அறிக்கைகைளைக் கைப்பற்றி முடக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+