தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 8ம் தேதி நடக்கவுள்ள வாக்குப் பதிவுக்காக சுமார் 1 லட்சம் மத்தியப் படையினரும் போலீசாரும் மாநிலம்முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

196 கம்பெனி மத்திய பாராமிலிட்டப் படைகளும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 111 கம்பெனிகளும், மக்களவைத் தேர்தலில் 125கம்பெனி மத்தியப் படைகளும் தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால், இம்முறை மிகப் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளோம். மத்திய எல்லை பாதுகாப்புப் படை, மத்தியரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ரிசர்வ்போலீஸ் படைகள் தமிழகம் வந்துள்ளன என்றார்.

தமிழகம் வந்துள்ள மத்தியப் படைகள் ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.பதற்றமான பகுதிகளில் ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைத் தவிர ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாரும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 60 தொகுதிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டு அங்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 5,928 வாக்குப் பதிவு மையங்களில் 302 மையங்கள் பதற்றமானவை என அடையாளம்காணப்பட்டுள்ளன.

இன்று முதல் வாக்குப் பதிவு முடியும் வரை இந்த இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 13,500 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடவுள்ளனர்.

இவர்களைத் தவிர கமாண்டோ படையினரையும் தயார் நிலையில் வைத்திருக்க உள்துறைக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+