சன் டிவி Vs

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் சன் டிவியும், அதிமுகவின் ஜெயா டிவியும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு செய்து வரும் பிரசாரம் ஏற்கனேவே சூடாகிப் போயுள்ள தேர்தல் களத்தைபயங்கர கதகதப்பாக்கியுள்ளது.

karunanithi

மே 8ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை வாழ்வா, சாவா என்ற அளவுக்குபடு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளன அதிமுகவும், திமுகவும்.

வெற்றியைப் பறிக்க படு தீவிரமாக உள்ளன இரு கட்சிகளும். ஆரம்பத்தில் அதிமுகதொண்டர்கள் புயலாக சுழன்று வேலை பார்த்த நிலையில், கருத்துக் கணிப்புக்கள்அடுத்தடுத்து பேரிடியாக வந்திறங்கியதால் சோர்ந்து போக ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆரம்பித்தில் அத்தனை நம்பிக்கையில்லாமல் களமிறங்கிய திமுகதொண்டர்கள், தங்கள் தலைவருக்கும் கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கும் கூடியகூட்டத்தைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்து களத்தில் சுழன்றடித்து இயங்கிவருகின்றனர்.

யார் யாரை விலைக்கு வாங்க முடியுமோ அவர்களையெல்லாம் தங்களது பக்கம்கொண்டு சென்று விட்ட அதிமுக, எதிர் அணியில் உள்ள சிலரை மிரட்டியும், சிலரைதாஜா செய்தும் போட்டியிலிருந்து பலவீனமடையச் செய்துள்ளது.

மறுபக்கம் தனது வாக்குறுதிகளால் அதிமுகவை நிலை குலைய வைத்துவிட்டது திமுக.இதுவரை இல்லாத அளவுக்கு சளைக்காமல் ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளது.

டிவிக்களின் சூப்பர் யுத்தம்:

தேர்தல் களத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் முட்டி மோதி வரும் நிலையில்சன் மற்றும் ஜெயா டிவிகளில் சூப்பர் யுத்தம் நடந்து வருகிறது.

Murasoli Maran

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டங்களை லைவ் ரிலே செய்துதமிழக தேர்தலை அமெரிக்கத் தேர்தல் மாதிரி மாற்றிவிட்டது சன் டிவி.

கருணாநிதி சென்ற இடமெல்லாம் திரண்ட கூட்டத்தை சன் டிவி தினந்தோறும்லைவாகக் காட்டியபோது தான் அரசியல் களத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு வருவதைமற்றவர்களால் உணர முடிந்தது.

கலைஞர் சொன்னதை செய்வாரு..

karunanithi

கலைஞர் செய்றதைத் தான் சொல்வாரு.. சொன்னதை செய்வாரு என்று ஒரு குட்டிவாண்டு மூலம் சன் டிவியில் 45 செகண்டுகள் மட்டுமே ஓடும் ஒரு விளம்பரம் நச்என்று செய்யப்பட்டு வருகிறது.

அம்மாவின் ஆட்சியிலே..

அதே நேரத்தில் அம்மா ஆட்சியைப் பாரீர் என்று ஜெயா டிவியிலும் பதிலுக்கு விளம்பரம் வருகிறது. ஆனால், அதன் நீளம் ரொம்ப அதிகம். சுமார்10 நிமிடம் விளம்பரம் ஓடுகிறது.

சன் டிவியில் நேர்முகம் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர்கள் அதிமுகவை போட்டு வாங்க, ஜெயா டிவியின் தேர்தல் களம் நிகழ்ச்சியில் ரவி பெர்னாட் நடத்தும்நேர்முகத்தில் ஜெயலலிதா, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கருணாநிதியை வாட்டி எடுத்தப வருகின்றனர்.

துரோகிகள்:இந் நிலையில் கடந்த இரு நாட்களாக சன் மற்றும் ஜெயா டிவியில் அடுத்த கட்ட டாப் டக்கர் பைட் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

தேர்தல் களத்தில் துரோகம் என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தை சன் டிவி.மேற்கொண்டுள்ளது. இதில் வைகோ மற்றும் சரத்குமாரை வாங்கு வாங்கென்றுவாங்குகிறார்கள்.

அசிங்கப்படும் சரத்குமார்:

கொஞ்ச நாளுக்கு முன் நடந்த திருச்சி திமுக மாநாட்டில் சரத்குமார்உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதை ஒளிபரப்புகிறார்கள்.

Sarath

அதில் எனது தலைவர் கலைஞரின் காலடியில் எனது உயிரை கொடுப்பேன். எனதுஉயிர் போகும்போது எனது உடலில் திமுக கொடிதான் போர்த்தப்பட்டிருக்கும். 5வதுறையாக கலைஞர் மீண்டும் தல்வராக அனைவரும் ஒற்றுமையுடன் இருந்துசெயல்பட வேண்டும். யார் வேண்டுமானாலும் (அப்போது வைகோ அதிமுகவுக்குப்போய் விட்டார்) அங்குபோகட்டும், எங்கே வேண்டுமானாலும் போகட்டும். நாம்ஒற்றுமையாக இருப்போம் என்று முழங்கியதைக் காட்டும் சன் டிவி,

அடுத்த காட்சியாக, சமீபத்தில் அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவைபுரட்சித் தலைவி, பொன்மகள் என்று புகழ்ந்து சரத்குமார் பேசுவதைக் காட்டுகிறது.

வைகோவின் பல்டி குரல்:

அடுத்து வைகோ. பொடா சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் வைத்து வைகோ கைது செய்யப்படுவதைக் காட்டுகிறது சன் டிவி.

Vaiko

அப்போது மிகவும் கோபாவேசமாக முழங்குகிறார் வைகோ. பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை ஒழிப்பேன். பாசிச ஜெயலலிதா ஒழிக, ஒழிகஎன்று குரல் உயர்த்தி சவுண்டு விடும் வைகோவை போலீசாரால் தள்ளிக் கொண்டு போகிறார்கள்.

அதே வைகோ அடுத்த காட்சியில்,பூந்தமல்லி சிறைக்கு வெளியே போலீஸ் வேனில் அமர்ந்தபடி ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துசெய்தியாளர்களிடம் பேசுகிறார் வைகோ.

கொலைகாரியின் ஆட்சி ஒழிக..

அடுத்த காட்சியில், கோவையில் 3 மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து வைகோ ஆவேசமாக பேசுகிறார். ஜெயலலிதா ஒருகொலைகாரி, அந்தக் கொலைகாரியின் ஆட்சி ஒழிய வேண்டும் என்று கோபமாக அனல் கக்குகிறார் வைகோ.

அடுத்த காட்சி. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட பின்னர் அவரிடம், உங்கள் தலைமையில்தனித்த பெரும்பான்மையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும், மிகத் தீவிரமாக உழைக்கும் என்று முகம்நிறைய புன்னகையுடன் கூறுகிறார் வைகோ,அருகே வெற்றிப் பெருமிதத்துடன் ஜெயலலிதா.

இப்படிப் போகிறது வைகோ, சரத் குமார் குறித்த சன் டிவியின் பிரசாரம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே:

அதே போல இன்னொரு பிரசாரமம் இப்போது தூள் கிளப்பிக் கொண்டுள்ளது.

ஆட்டோகிராப் படத்தில் வந்த ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே என்ற பாடல்வரிகளை எடுத்துக் கொண்டு இந்த விளம்பரத்தை அமைத்துள்ளனர்.

பேக்கிரவுண்டில் அந்த வரிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்க நள்ளிரவில் கருணாநிதிபோலீசாரால் கைது செய்யப்பட்டு அடுத்து இழுத்துச் செல்லப்படுகிறார், முரசொலிமாறனை போலீஸார் காரில் இருந்து குண்டுக்கட்டாக இறக்கி தூக்கிச் செல்கிறார்,அருகில் இருக்கும் பரிதி கண்ணீரோடு கதறுகிறார்.

மாணவிகள் உயிரோடு எரிந்து..

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிந்து கொண்டிருக்கும்அதிமுகவினரின் பஸ் எரிப்பு காட்சி ஓடுகிறது.

Dharmapuri college bus on fire

சென்னையில் நடந்த திமுக பேரணியில் தாதா வீரமணி ஆட்களை விட்டு நடத்தியபட்டாக் கத்தி தாக்குதலில் சுருண்டு விழும் திமுகவினர், அதைப் படம் பிடிக்கும்பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸார் நடத்திய வன்முறைத் தாக்குதல், ஒரு பெண்பத்திரிக்கையாளர் கண்ணீரோடு கதறுவது,

அரசு ஊழியர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்ப்படுவது, அதைத்தடுக்கும் குடும்பத்தினரை போலீசார் கையைப் பிடித்து இழுப்பது,

ராணி மேரிக் கல்லூரியில்..

ராணி மேரிக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளை போலீஸார் கண் மண் தெரியாமல்அடித்து உதைத்து இழுத்துச் செல்வது,

தஞ்சையில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, அவர்களதுகுடும்பத்தினர் கும்பலாக அமர்ந்து தலையில் அடித்து கதறுவது,

தற்கொலைகள்:

தற்கொலை செய்து கொண்ட சாலைப் பணியாளர்களின் மனைவிமார்கள் அழும்அழுகை, சாலைப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டங்கள்,

விஷச் சாராய சாவுகள், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் இறந்தது, அவர்களதுஉறவினர்களின் கதறல் என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்தபல்வேறு சம்பவங்களை ஸ்லோ மோஷனில் தொகுத்து பின்னணியில் ஞாபகம்வருதே ஞாபகம் வருதே என்ற பாடலோடு ஒலிக்க விட்டு கலக்குகிறது சன் டிவி.

இதையெல்லாம் 2 நிமிடத்தில் காட்டி முடிப்பது தான் இந்த விளம்பரத்தின் பலம்.

ஜெயாவில் ராஜிவ் கொலை திக் திக்..

இதை தூக்கி சாப்பிடும் வகையில் பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டு அதிமுக தரப்பு ஜெயா டிவியில் கலக்கி வருகிறது.

Jaya TV

கலைஞரின் கைமாறு என்ற தலைப்பிலான அந்த தொகுப்பில், கலைஞர் கதை, வசனத்தில் உருவான கண்ணம்மா படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ராஜாவிக்ரம், அவரது மகன் பாபா விக்ரம் குறித்து கூறப்படுகிறது.

இருவரும் கலைஞர் குறித்தும், கண்ணம்மா படம் குறித்தும் பேட்டி கொடுக்கிறார்கள். கலைஞர் இப்படத்தை எடுக்கும்போது காட்டிய அக்கறை, தங்கள்மீது காட்டிய அக்கறைகளை விவரிக்கிறார்கள்.

ரொம்ப பாசிட்டிவ்வாக நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது. திடீரென ஒரு கேள்வியைக் கேட்கிறது ஜெயா டிவி. ராஜா விக்ரம், பாபா விக்ரம் மீதுகலைஞருக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று.

அடுத்த காட்சியில் ராஜா விக்ரம் யார் தெரியுமா, ராஜீவ் காந்தி கொலையில், முதலில் தூக்குத் தண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் தங்கை கல்யாணியின் கணவர்தான் ராஜா விக்ரம் என்கிறார்கள்.

யார்? யார்? யார்?

நளினி, கல்யாணி சகோதரிகளின் தாயார் பத்மாவின் பேட்டியையும் காட்டுகிறார்கள். ராஜா விக்ரமின் ஏழ்மை நிலையை விவரிக்கிறார்கள். மிகவும்சாதாரணமாக இருந்த ராஜா விக்ரம் எப்படி கலைஞருக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்த தயாரிப்பாளராக உயர்ந்தார்?உயர்ந்தார்? உயர்ந்தார்? (எக்கோ போடுகிறார்கள்)

அவருக்கு படம் எடுக்கும் அளவுக்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் யார்? யார்? யார்?

கலைஞர் ஏன் ராஜா விக்ரம் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் இத்தனை பாசம் காட்டினார்? காட்டினார்? காட்டினார்?

கண்ணம்மா படத்தின் உண்மையான தயாரிப்பாளர் யார்?யார்?யார்?

என்ன? என்ன? என்ன?:

நளினியின் தங்கை கணவருக்கு உதவ வேண்டும் என்று கலைஞர் நினைத்திருந்தால் அதை ஏன் வெளிப்படையாக செய்யவில்லை, திரைமறைவாக செய்ய வேண்டியஅவசியம் என்ன? என்ன? என்ன?

Jayalalitha

இந்த அளவுக்கு கலைஞர் செய்த கைமாறுக்கு அர்த்தம் என்ன? என்ன? என்ன? ஜெயின் கமிஷனால் குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறைவாசம்அனுபவித்து வரும் நளினிக்கும், ராஜா விக்ரம்-கல்யாணி தம்பதியினரின் குடும்பத்திற்கும் இன்றும் நல்லுறவு நீடிக்கிறது.

அப்படி இருக்கையில், ஜெயின் கமிஷனால் பலமான சந்தேகத்திற்கு ஆளான கருணாநிதி, ஏன் ராஜா விக்ரமுக்கு இப்படி விழுந்து விழுந்து உதவினார் என்றுபல்வேறு கேள்விகள் அந்த நிகழ்ச்சியில் அடுக்கப்படுகிறது.

இறுதியாக, ராஜீவ் காந்தி படத்தைக் காட்டி, இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டியவர்கள் கருணாநிதி காலில் விழுகிறார்கள், நடந்தசம்பவத்தை மறந்தவர்களும் (சோனியா காந்தியைக் காட்டி) விடை சொல்ல மாட்டார்கள். இந்தக் கேள்விகளுக்கான விடையோ சத்தியமூர்த்திபவனில் வாசலில் அடிபட்டு, மிதிபட்ட தொண்டர்களுக்கு கிடைக்கவே போவதில்லை.

இப்படிக்கு ஜெயா டிவி புலனாய்வுக் குழு என்று டைட்டில் போட்டு அந்த நிகழ்ச்சியை முடிக்கிறார்கள்.

ஜெயா டிவி இத்தோடு நிற்கவில்லை. இலவச சைக்கிள் திட்டத்தால் பலனடைந்த மாணவ, மாணவியரின் பேட்டிகள், நலத் திட்ட உதவிகளால்பலனைடந்தவர்களின் பேட்டிகளை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை போட்டு வருகிறது.

சன் டிவியின் புரொபனலிஸம் ஜெயா டிவியில் இல்லை என்பது தான் குறை. எதையுமே சுருக்கமாக சொல்லாமல் வளவளவென இழுத்து புராணம் பாடிவிடுகிறார்கள்.

விஜய்யிலும் அம்மா..

சன் டிவியின் ரீச் மிக பலமானது என்பதால் ஜெயா டிவியை மட்டும் கொண்டுகவுண்டர் கொடுப்பது சிரமம் என்பதால் விஜய் டிவியிலும் அம்மாவின் பிரச்சாரவிளம்பரம் ஒளிபரப்பாகிறது.

இத்தனை நாள் டிவியில் பாட்டு அல்லது அழுவாச்சி சீரியல்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேயர்களுக்கு இரு டிவிக்களின் தேர்தல் நிகழ்ச்சிகள் மிகவித்தியாசமான அனுபவமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+