பி.டி.ஆர் வீட்டில் ஜூவி நிருபர் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகரும் மண்டைகனத்துக்கு பேர் போனவருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீட்டு வளாகத்தில்ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் குள.சண்முகசுந்தரம்தாக்கப்பட்டார்.

சட்டசபைத் தேர்தலில் மதுரைமத்திய தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆர். வெற்றிபெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை பேட்டி காண்பதற்காக ஜூனியர் விகடன்இதழின் உதவி ஆசிரியர் குள.சண்முகசுந்தரம் போட்டோகிராபருடன் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது சண்முகசுந்தரத்தை பி.டி.ஆர். அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து திமுகவினர் சிலர் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளனர்.

இதில் அவரது மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. அங்கே இருந்த சகபத்திரிக்கையாளர்கள் சண்முசுந்தரத்தை மீட்டு வெளியே கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், பி.டி.ஆரை நான்பார்க்கபோனபோது, இங்கே எதற்காக வந்தாய், வந்தவுடன் நான் பேட்டி கொடுக்கவேண்டுமா. ஒழுங்காக எழுதுவதாக இருந்தால் இங்கு வா, இல்லாவிட்டால்தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து திமுகவினர் என்னைத் தாக்கத் தொடங்கினர் என்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

ஜூனியர் விகடனை சன் டிவி வாங்கி விட்டது. இதைத் தொடர்ந்து அங்குபணியாற்றும் நிருபர்களை மிரட்டி தங்களுக்கு சாதகமாக எழுதுமாறு திமுகமிரட்டுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+