கருணாநிதியுடன் காங். எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர்.
இன்றைய சட்டசபைக் கூட்டம் முடிவடைந்ததும் கருணாநிதியை சட்டசபைக்குபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ்தலைமையில் சென்று சந்தித்தனர்.அனைத்து எம்.எல்.ஏக்களும் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி கோரிக்கைமனுக்களை கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ்பேசுகையில்,
மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தோம். ஒவ்வொரு எம்.எல்.ஏவும் அவரதுதொகுதி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து மனுக்கள்வாயிலாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் தொகுதிகளும், திமுக தொகுதிகளைப் போல கருதிநிச்சயம் அனைத்து நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என முதல்வர்உறுதியளித்தார் என்றார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரசில் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
சட்டசபை காங். நிர்வாகிகள்:
இதற்கிடையே சட்டசபை காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே சுதர்சனம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் துணைத் தலைவராக யசோதா, கொறடாவாக பீட்டர் அல்போன்ஸ்ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications