டிஜிபி முகர்ஜி பொறுப்பேற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காவல்துறையின் டிஜிபியாக டி.முகர்ஜி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அலெக்ஸாண்டருக்குப் பதிலாக சிபிஐயில் பணியாற்றி வந்த தமிழக கேடரைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ்அதிகாரியான முகர்ஜியை டிஜிபியாக நியமித்தார் முதல்வர் கருணாநிதி.
![]() |
| டிஜிபி முகர்ஜியுடன் (இடது) ஜெயின் (நடுவில்), திலகவதி, லத்திகா சரண், விஜய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் |
இதையடுத்து மத்திய அரசுப் பணியில் இருந்து விடுபட்டு தமிழகம் வந்துள்ளார் முகர்ஜி. இன்று காலைபதவியேற்ற அவருக்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.இதன் பின் நிருபர்களிடம் முகர்ஜி பேசுகையில்,நாட்டிலேயே மிகச் சிறந்த காவல் துறை என்று பெயர் பெற்ற தமிழக காவல்துறையின் டிஜிபியாக என்னைநியமித்ததை மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன் என்றார்.அதிமுகவினர் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக புகார்கள் வந்துள்ளனவே என நிருபர்கள் கேட்டதற்கு,இப்போது தானே பொறுப்பை ஏற்றேன். பாதுகாப்பு கொடுப்பதில் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும்காட்டப்படாது என்றார்.













Click it and Unblock the Notifications