கருணாநிதி டெல்லி பயணம்: ஆட்சியில் பங்கு குறித்து சோனியாவுடன் பேச்சு?
டெல்லி:
தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைஅப்படியே உள்ளது. இதுகுறித்து சோனியாவும், கருணாநிதியும் முடிவு செய்வார்கள்என காங்கிரஸ் தமிழக பார்வையாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதி 4ம் தேதி காலை டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர்அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை சந்தித்துப்பேசுகிறார்.முதல்வர் பதவியை ஏற்ற பிறகு கருணாநிதி மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம்இதுவாகும். அப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையைகருணாநிதியிடம் சோனியா வலியுறுத்தவுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தமிழக காங்கிரஸார் கோரிவருகின்றனர். மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். இதுதொடர்பாகஎம்எல்ஏக்கள் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரத்தில் பங்கு தருமாறு காங்கிரஸ் தலைமை திமுகவிடம்கோரி வருகிறது. ஆனால், திமுக தரப்பில் இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதிநிலவுகிறது. ஆட்சியை பங்கு போட திமுக விரும்பவில்லை.
இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மொய்லி,
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையில் மாற்றமுஇல்லை, அப்படியே நீடிக்கிறது.
டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள திமுகவின்ஆட்சில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸார் விரும்புகிறார்கள்.
அவர்களது கோரிக்கையை தவறு என்று கூறி விட முடியாது. இதுகுறித்து சோனியாகாந்திக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சோனியாவும்,கருணாநிதியும் இறுதி முடிவு எடுப்பார்கள்.
கருணாநிதி டெல்லி வரும்போது இதுதொடர்பாக அவருடன் சோனியா காந்திபேசுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் மொய்லி.












Click it and Unblock the Notifications