கவுன்சிலர் காதை அறுத்து தோடு-, தாலி திருட்டு!
சேலம்:
சேலம் அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண் கவுன்சிலரின் காதைஅறுத்து அவர் அணிந்திருந்த தோடு மற்றும் தங்கத் தாலியை கொள்ளையர்கள்அறுத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாநகர மேயர் சுரேஷ்குமாரின் தங்கை,அதிகாலையில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோதுமோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறித் திருடர்கள், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.இந்த நிலையில் சேலம் அருகே எஸ். நாட்டாமங்கலம் என்ற இடத்தில் பெண்கவுன்சிலர் ஒருவரிடம் காதை அறுத்து தோடு மற்றும் தங்கத் தாலியை இரண்டு பேர்அறுத்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கொட்டலாம்பட்டி பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் அம்சவேணி. இவர்நாட்டாமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று பிற்பகல் நின்று கொண்டிருந்தார்.அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரிடம் வந்து ஒரு கவரியைக் காட்டி இதுஎங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.
அம்சவேணி கவரியை பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென இருவரில் ஒருவர்அம்சவேணியின் காதை அறுக்கத் தொடங்கினார். அவர் வலி பொறுக்க முடியாமல்கத்தியுள்ளார்.
ஆனாலும் அந்த திருடன், காதை அறுத்து அதில் அணிந்திருந்த தோட்டை மட்டும்எடுத்துக் கொண்டு காதின் ஒரு பகுதியை தூக்கி தூரப் போட்டுள்ளான்.
பின்னர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கயிற்றையும் அறுத்து தாலியை மட்டும்எடுத்துக் கொண்டு கயிற்றை அம்சவேணியின் கையில் திணித்து விட்டு மோட்டார்சைக்கிளில் பறந்து விட்டனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து துணிகர திருடர்களைத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications