பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: சென்னையில் ஆட்டோ கட்டணம் எகிறியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி சென்னை நகரஆட்டோ ஓட்டுநர்கள், கட்டணத்தை கடுமையாக உயர்த்தி விட்டனர்.

சென்னை நகரில் முன்பெல்லாம் மீட்டர் கட்டணம் முறையாக வசூலிக்கப்பட்டுவந்தது. ஆனால் அதன் பின்னர் மீட்டரில் சூடு வைக்கும் பிரச்சினை, ஊருக்குப்புதியவர்களை அங்கும் இங்கும் சுற்றிக் காட்டி அலைக்கழித்து காசு பறிப்பது எனமோசடி வாகனமாக ஆட்டோக்கள் மாறின.

இப்போது மீட்டர் என்பதே சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. எந்த ஆட்டோடிரைவரும் இப்போது மீட்டரைப் போடுவதே இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு ஒருகட்டணத்தை நிர்ணயித்துக் கொண்டு மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் இவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விடுவார்கள்.

இப்போது மீண்டும் கட்டணத்தைக் கூட்டி விட்டார்கள். குறைந்தபட்ச கட்டணம்இப்போது 20 ரூபாய் என்கிறார்கள். இந்த கடும் கட்டண உயர்வால், தினசரிஆட்டோவில் பயணிப்பவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அண்ணா சாலையிலிருந்து சாலிகிராமம் வரை முன்பு ரூ.60 முதல் 70 வரை பிளாட்ரேட்டாக வசூலித்து வந்தார்கள். இப்போது அது 90 ரூபாய் ஆகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி தொடர்பான செய்திகள்பு வசூலித்து வந்தகட்டணத்தை விட குறைந்தது ரூ. 10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக ஆட்டோடிரைவர்கள் கேட்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

அரசு உடனடியாகத் தலையிட்டு முறையான மீட்டர்களைப் பொருத்தி அதன்படிபயணிகளிடம் கட்டணம் வசூலிக்கச் செய்தால் மட்டுமே ஆட்டோ ஓட்டுநர்களின்கொடூரப் பிடியிலிருந்து தப்ப முடியும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+