கழுதையை கைது செய்த போலீஸ்!
காஞ்சிபுரம்:
வீட்டு மனை பட்டா கோரி கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் காஞ்சிபுரத்தில்நடத்தப்பட்டது. இதையடுத்து கழுதை உள்பட 50 பேரை போலீஸார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மக்கள் மன்றம், மண்ணின் மைந்தர் கழகம் ஆகியவை இணைந்து இருளர்சமூகத்தினருக்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்திருந்தன. ஆனால் அந்த மனு மீது நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
![]() |
| தனது கழுதையுடன் மகாலட்சுமி |
இதையடுத்து நூதனப் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர்.இதைத் தொடர்ந்து ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கழுதையிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் போராட்டம் நடத்தியவர்களைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்களில் 8 பேரையும், அந்த கழுதையையும் நீதிமன்றத்திற்குஅழைத்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் 15 நிாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தமராஜா உத்தரவிட்டார்.
ஆனால் கழுதை குறித்து தீர்ப்பு அளிக்கவில்லை. இதனால் குழம்பிய போலீஸார்கழுதையை என்ன செய்வது என்று நீதிபதியிடம் கேட்டனர்.
அதற்கு நீதிபதி அதை நீங்களே வைத்திருந்து நாளை கொண்டு வாருங்கள். இதன்உரிமையாளர் யார் என்ற விவரத்தை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்துளளனர்.
இந்தக் கழுதை தூசி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது.இதை குமார் என்பவர் நாடகத்திற்குத் தேவை என்று கூறி ரூ. 300 வாடகை கொடுத்துஅழைத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து கழுதையின் உரிமையாளர் மகாலட்சுமி கூறுகையில்,கழுதையை நடு ரோட்டில் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிந்து அங்கேபோனேன். ஆனால் அதற்குள் எனது கழுதையை போலீஸார் கைது செய்து அழைத்துச்சென்று விட்டார்கள்.
அப்போது ஓடியபோது கழுதைக்காக குமார் கொடுத்த வாடகை பணமும் கீழேவிழுந்து விட்டது.
இப்போது எனது கழுதையும் போச்சு, பணமும் போச்சு என்று தலையில் கைவைத்தபடி கவலையுடன் கூறினார் மகாலட்சுமி.
இந் நிலையில் வழக்கில் இருந்து கழுதையை விடுவிக்குமாறு போலீசாருக்கு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கழுதை மகாலட்சுமியிடம்ஒப்படைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications