நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. மழைக்காலக்கூட்டத் தொடரின்போது சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
அதிமுகவின் தீவிர முயற்சியினால் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை நாடாளுமன்றவளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சிலைசெய்யும் பணி தொடங்கியது.ஜெயலலிதாவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட சிலை கடந்த வாரம் டெல்லிக்குஎடுத்துச் செல்லப்பட்டது. இந்த சிலை வருகிற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது திறந்து வைக்கப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் முன்னிலையில், ஜெயலலிதா தலைமையில் நடைபெறும்விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிலையை திறந்துவைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications