நடிகை மீது தாக்குதல்-ராதாரவிக்கு முன் ஜாமீன்
சென்னை:
நடிகை தேவியைத் தாக்கிய வழக்கில் நடிகர் ராதாரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம்முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் நடிகைதேவி. இவர் கடந்த ஆண்டு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவுக்குப் போனபோதுசிலர் தேவியைத் தாக்கினர்.விஜயகாந்த், ராதாரவி ஆகியோரது தூண்டுதலின் பேரில் தான் தாக்கப்பட்டதாக தேவிதேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்துமீண்டும் புகார் கொடுத்தார் தேவி.
இந்தப் புகாரை போலீஸார் தற்போது தூசி தட்டத் தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, ரூ. 25,000 ரொக்க ஜாமீன், அதேதொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் பெற்ற பின்னர் தொடர்ந்து 3 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் 9 மணிவரை தேனாம்பேட்டை போலீஸில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று தனதுஉத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications