ஜெ மீது கள்ள நோட்டு வழக்கு போட சதி!
மதுரை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கள்ள நோட்டு வழக்குப் போட திமுகயற்சிப்பதாக மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்கம் புகார்கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த மாநகர் மாவட்ட அதிமுக பொதுக் கூட்டத்தில் எஸ்.வி.சண்முகம்பேசுகையில்,திமுக ஆட்சிக்கு வந்தால் கலர் டிவி தருவோம், 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறிஆட்சியைப் பிடித்து விட்டனர். இப்போது ஓட்டுப் போட்ட மக்களுக்கு பட்டை நாமம்போடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சமத்துவபுரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இப்போது டிவி என்று கூறியுள்ளனர்.அப்படிப் பார்த்தால் மதுரை மேற்குத் தொகுதியில் சமத்துவபுரமே கிடையாது. எனவேஇங்குள்ள மக்களுக்கு கலர் டிவியும் கிடையாது. இது முதல் நாமம்.
அடுத்து தரிசு நிலங்களை மேம்படுத்தி 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றனர். மதுரைமேற்குத் தொகுதியில் தரிசு நிலம் கிடையாது. எனவே இந்தத் தொகுதி மக்களுக்குஇலவச நிலமும் கிடைக்காது. இது கருணாநிதி போட்ட 2வது பட்டை நாமம்.
அடுத்த நாமம் 2 ரூபாய்க்கு அரிசி திட்டம். 2 ரூபாய் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்அரிசியில் அரிசியை விட கல்தான் அதிகம் உள்ளது. 3 கிலோ அரிசியை சலித்துஎடுத்தால் அதில் ஒரு கிலோ அரிசிதான் உள்ளது. மற்றது எல்லாமே சுத்தமானகல்தான். அந்த அளவுக்கு கலப்படம் செய்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியின் 5 ஆண்டு காலமும் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால்கருணாநிதி ஆட்சிக்கு வந்து 1 மாதம்தான் ஆகிறது. அதற்குள் ஏழை மக்கள்பரிதவிக்க ஆரம்பித்து விட்டனர்.
மக்களே கவலைப்படாதீர்கள். இன்னும் 8 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். பிறகுமீண்டும் அதிமுக ஆட்சி பீடத்திற்கு வரும்.
ஜனனி மீது கள்ள நோட்டு வழக்குப் போட்டுள்ளனர். அவரது வீட்டில்கைப்பற்றப்பட்ட பணத்தில் 30 லட்சம் ரூபாய் கள்ளப் பணமாம். இதை 2003ம்ஆண்டே கண்டுபிடித்து விட்டார்களாம்.
அப்படியானால் அப்போதே வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே? இப்போது ஏன்போடுகிறீர்கள்?
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை 3 நாட்கள் எண்ணினார்களாம்.
அப்போது கள்ள நோட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? உ.பி. முன்னாள் முதல்வர்மாயாவதி மாமல்லபுரத்திற்கு வந்து ரகசியமாக சிகிச்சை பெற்றாராம். அதற்காக 50கோடி பணம் கொடுத்தாராம். அந்தப் பணமும் கள்ளப் பணமாம்.
மாயாவதி ஏன் ரகசியமாக வர வேண்டும்? அப்படியே அவர் வந்திருந்தாலும்மக்களுக்குத் தெரியாமலா போயிருக்கும். சரி வந்தார், அவர் எதற்கு 50 கோடிபணத்தைக் கொடுக்க வேண்டும், அதுவும் கள்ளப் பணமாக?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஜெயலலிதா மீதும், அதிமுக மீதும் களங்கம் கற்பிக்கமுயற்சிக்கிறார்கள். ஜனனி கள்ள நோட்டு விவகாரத்திலும் ஜெயலலிதாவை சிக்கவைக்க சதி செய்கிறார்கள். ஆனால் இது எடுபடாது.
திமுகவுககும், அதிமுவுக்கும் இடையே 33 எம்.எல்.ஏக்கள் வித்தியாசம்தான்.விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்றார் சண்முகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications