ஜீனாகுமாரி அல்ல ஜிகினா குமாரி.. வக்கீல் பரபரப்பு புகார்
சென்னை :
அரசு மருத்துவர் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகாரைக்கிளப்பிய பார்மசி மாணவி ஜீனா குமாரி மீது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ்மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வழக்கறிஞர் டென்னிசன் பரபரப்பு புகார்களைக்கூறி தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.
![]() |
தன்னை கற்பழிக்க முயன்றதாகவும், வற்புறுத்தி முத்தம் கொடுத்ததாகவும் அவர்மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட டாக்டர் பிரின்ஸ் நேற்று ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
இந் நிலையில் ஜீனாகுமாரி மீது காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட மனிதஉரிமைப் பிரிவு தலைவரான வழக்கறிஞர் டென்னிசன் பரபரப்பு புகார் சுமத்தியுள்ளார்.
முதல்வரின் தனிப்பிரிவில் அவர் கொடுத்துள்ள மனுவில்,
நான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசித்து வருகிறேன். டாக்டர் பிரின்ஸ்மீது ஜீனா குமாரி கூறிய புகார்கள் குறித்து பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.
மாணவி ஜீனாகுமாரி நல்லவர் அல்ல. மிகவும் மோசமானவர். அவரது உண்மையானபெயர் ஜீனா குமாரி அல்ல, ஜிகினா குமாரி. பெயருக்கேற்றார்போல பல ஜிகினாவேலைகள் செய்வதில் அவர் கில்லாடி.
2004ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தன்னுடன்படித்த மாணவர் ஒருவர் மீது போலி புகார் கொடுத்தார் ஜீனா குமாரி.
அதேபோல 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசை ஏமாற்றி ரூ. 50,000 மோசடிசெய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறையப் பேரை அவர் ஏமாற்றியுள்ளார். அவரால்பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். ஜீனா குமாரி கொடுத்த அத்தனைபுகார்களும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
அவரது உண்மையான முகம் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குத் தெரியும்.இப்போது சென்னையிலும் தனது மோசடி வேலையைத் தொடங்கியுள்ளார்ஜீனாகுமாரி.
அவரது மோசடிகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவரதுமுகத்தை நாட்டுக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் அவரால் தொடரும் மோசடிகள்தடுக்கப்படும் என்று கூறியுள்ளார் டென்னிசன்.
இந்தப் புகார் மனு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இணை ஆணையர் சூடேஸ்வரன் விரைவில் ஜீனாகுமாரியிடம்விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது.
டென்னிசன் கூறியுள்ள புகார் மிகவும் பொத்தாம் பொதுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு எந்தபுகாரையும் விரிவாக அவர் சொல்லவில்லை. இதனால் டாக்டரைக் காப்பாற்ற டென்னிசன் இடையில் புகுந்துகுட்டையை குழப்ப முயற்சிக்கிறாரோ என்றும் சந்தேகம் எழுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications