மதுரை டீன் குவார்ட்டர்சில் டாக்டர் கற்பழித்தார்:ஜெயலட்சுமியின் தோழி லலிதாகுமாரி புகார்
மதுரை:
மதுரை டீன் குவார்ட்டர்சில் டாக்டர் உள்பட 2 பேர் சேர்ந்து என்னை கற்பழித்து விட்டார்கள் என்றுஜெயலட்சுமியின் தோழியான லலிதாகுமாரி போலீஸ் ஐஜியிடம் புகார் கொடுத்துள்ளார்.
![]() |
தனது கணவர் சிவக்குமார் தன்னிடம் இருந்த நகைகளையும் பணத்தையும் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக லலிதாகுமாரி போலீசில் புகார் கூறினார்.
இந்த புகார் தொடர்பாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு பணிபுரிந்து வந்த ஏட்டுகள் சணல்குமார்,அசோகன் ஆகியோரும் தொழிலதிபர் ஒருவரும் சேர்ந்து சிமெண்டு பேக்டரி தொடங்கலாம் என்று ஆசை காட்டிதன்னை கற்பழித்து விட்டதாக லலிதாகுமாரி புகார் கூறினார்.
இந்த புகார் தொடர்பாக மதுரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் தனக்குதிருப்தி இல்லை என்று லலிதாகுமாரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நத்தார். இந்த வழக்கு மதுரைஉயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் போலீசார் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சிவகாசி ஜெயலட்சுமியுடன் இவருக்குபழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கிய தோழிகளானார்கள்.
இந்த நிலையில் லலிதாகுமாரி, தென் மண்டல ஐஜி சஞ்சீவ்குமாரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அந்த புகார்மனுவில் கூறியிருப்பதாவது,
போலீசார் என்னை கற்பழித்ததாக நான் தொடுத்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கு தொடர்பாக நான் மதுரைக்கு அடிக்கடி வந்து செல்லவேண்டி உள்ளது.
மேலும் நான் வறுமையில் வாடுகின்றேன். நான் நர்சிங் படிப்பு படித்து உள்ளதால் எனக்கு மதுரை அரசுமருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சரைசந்தித்து கேட்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தேன்.
பின்னர் நான் இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர் அரிகிருஷ்ணனை சந்தித்தேன்.அவரை சந்தித்து விவரங்களை கூறினேன். அதை கேட்ட டாக்டர் நாளை காலை 9 மணிக்கு வா வேலைக்கானஏற்பாடுகளை செய்கிறேன் என்று கூறினார்.
பின்னர் என்னை மதுரை டீன் குவார்ட்டர்சில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீட்டில்வேலைக்காரர் பாரி என்பவர் இருந்தார். வீட்டுக்குள் சென்ற சிறிது நேரம் கழித்து டாக்டர் என்னை கையைப்பிடித்து இழுத்தார்.
உடனே வேலைக்காரன் பாரி கதவை உள்பக்கமாக பூட்டினார். பின்னர் இருவரும் சேர்ந்து என்னை கற்பழித்தனர்.இரவு 11 மணி அளவில் டாக்டர் மட்டும் பக்கத்தில் உள்ள நர்சு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டுவெளியில் சென்று விட்டார்.டாக்டர் சென்ற பிறகு அவரது வேலைக்காரர் பாரி என்னை விடிய விடிய கற்பழித்தார். நேற்று காலை 7 மணிஅளவில் டாக்டர் மீண்டும் வந்தார். திரும்பவும் டாக்டரும், அவரது வேலைக்காரர் பாரியும் சேர்ந்து என்னைமீண்டும் கற்பழித்தனர்.
நான் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடினேன். அப்போது அவர்கள் என்னை இரும்பு கம்பியால்அடித்தனர். இதில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து போராடியபோது எனக்கு மயக்கம்ஏற்பட்டது.
இதனால் நான் மயங்கி கீழே விழுந்து விட்டேன். பின்பு 10 மணி அளவில் நான் அவர்களிடம் இருந்து தப்பித்துவந்தேன் என்று கூறியுள்ளார் லலிதாகுமாரி.
இந்த சம்பவம் மதுரை நகர எல்லைக்குள் நடந்துள்ளதால் இது குறித்து மதுரை நகர பேலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுக்குமாறு ஐஜி.சஞ்சீவ்குமார் கூறினார். இதனைத் தொடர்ந்து லலிதாகுமாரி மதுரை மாநகர போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications