இலங்கை ஆளுங்கட்சி தலைவரானார் ராஜபக்ஷே!
கொழும்பு:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திராகட்சியின் தலைவராகியுள்ளார்.
இலங்கையில் சுதந்திராக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்துவருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷே அதிபராக உள்ளார். இதுவரை கட்சித்தலைவர் பதவியை அவர் வகிக்காமல் இருந்து வந்தார். இந் நிலையில் தற்போதுகட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பண்டார நாயகே குடும்பத்தினர்தான் இதுவரை சுதந்திராக் கட்சியின் தலைவர்பொறுப்பில் இருந்து வந்தனர். முதல் முறையாக அந்தக் குடும்பத்தைச் சேராத ஒருவர்கட்சித் தலைவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சித் தலைவராகபோட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார ராஜபக்ஷே.
இதுவரை கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இருந்துவந்தார். அதிபர் பதவியை விட்டு சந்திரிகா விலகிய பிறகு கட்சித் தலைவர்பதவியிலிருந்து அவரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால்பதவியிலிருந்து விலக சந்திரிகா மறுத்து வந்தார்.
இந் நிலையில் கொழும்பில் நடந்த கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவை நீக்கி விட்டுராஜபக்ஷேவைத் தலைவராக்க தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துசந்திரிகாவுக்குப் பதில் புதிய தலைவராக ராஜபக்ஷே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சுதந்திராக் கட்சியின் தலைமைப் பொறுப்பு முதல் முறையாக பண்டார நாயகேகுடும்பத்திடமிருந்து கை மாறியுள்ளது.
தலைவர் பதவியைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தைதனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் ராஜபக்ஷே. தற்போதுஇலங்கையில் நிலவும் சூழ்நிலையில் கட்சித் தலைவராக ராஜபக்ஷேதேர்வாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
புலிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி:
இதற்கிடையே மன்னார் வளைகுடாப் பகுதியில் நடுக்கடலில் இலங்கைகடற்படைக்கும், விடுதலைப் புலிகளின் கடற் புலிகளுக்கும் இடையே நடந்த கடும்மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்வலுத்து வருகிறது. அனுராதாபுரம் பகுதியில் கண்ணிவெடியில் பேருந்து தகர்ப்பட்டசம்பவத்தைத் தொடர்ந்து மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
உச்சகட்டமாக கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ராணுவத்துணைத் தளபதி கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு இன்ற நடைபெறுகிறது.இந்த நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும்,கடற்படையினருக்கும் இடையே கடும் மோதல் நடந்துள்ளது.
கல்பிட்டியா என்ற பகுதியில் இரு இலங்கை கடற்படை கப்பல்கள் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தன. அப்போது கடற்புலிகள் படகுகள் வந்து கப்பல்களை சூழ்ந்துஅதிரடியாகத் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பும் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. இதில் ஒரு கடற்படை படகைவிடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர். அந்தப் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது.அந்தப் படகில் இருந்த 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
சுமார் 1 மணி நேரம் இந்த மோதல் நீடித்தது. இந்த நிலையில் கடற்படைக்கு ஆதரவாகபோர் விமானங்கள் அங்கு வந்தன. இதையடுத்து கடற்புலிகள் சென்று விட்டனர்.
இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் 12 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம்கூறியுள்ளது. ஆனால் இதை புலிகள் அமைப்பு மறுத்துள்ளது.
எங்களது தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது இலங்கை கடற்படைதான்.அவர்களின் ஒரு படகு தீக்கிரையாகி கடலில் மூழ்கி விட்டது. 5 வீரர்களும் பலியாகிவிட்டனர்.
புலிகள் தரப்பில் ஒருவர் மட்டுமே பலியானார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்கள் மீதுவிடுதலைப் புலிகள் திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர்உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.
மண்டபம் முகாம்-புதுப்பிக்க ரூ.27 லட்சம்:
இதற்கிடையே மண்டபம் அகதிகள் முகாமை பராமத்து செய்ய தமிழக முதல்வர்கருணாநிதி ரூ. 27 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்டபம் அகதிகள்முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் நிலை மோசமாகஇருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த முகாம்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள்சுப.தங்கவேலன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழகமுதல்வர் நியமித்தார்.
அகதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் அடிப்படை சாதனங்கள் பழுதடைந்தநிலையில் உள்ளன என்று அமைச்சர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படியும், மறுவாழ்வுத்துறை ஆணையரின் பரிந்துரைகளின்படியும்மண்டபம் முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள குடிசைகள், கழிவறைகள்,சாலைகள் ஆகியவற்றை செப்பனிடவும், குடிசைகளில் மின் இணைப்பு வசதி,தெருவிளக்கு ஆகியவற்றை புதுப்பித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் ரூ. 27 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தும், முதல்கட்டப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முன்பணமாக ரூ. 15 லட்சம் பணத்தைவிடுவித்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை சுட்டு மீனவர் காயம்:
இதற்கிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் நடத்தியவெறித் தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரனெ அங்கு வந்த இலங்கை கடற்படையினர்வானத்தை நோக்கி சுட்டனர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.அப்போது அங்கு வந்த இன்னொரு ரோந்து படகு, மீனவர்கள் மீது சரமாரியாகதுப்பாக்கியால் சுட்டது.
இதில் ஜூலியட் என்ற மீனவரின் விலா பகுதியில் குண்டு பாய்ந்தது.அவர் படகில்மயங்கி விழுந்தார். இதையடுத்து மற்ற மீனவர்கள் வேகமாக அங்கிருந்து கரைக்குத்திரும்பினர். ஜூலியட்டை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டார். பின்னர்அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜூலியட் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications