ராஜீவை கொன்றதாக கூறவில்லை-புலிகள் மறுப்பு
கொழும்பு:
ராஜீவ் காந்தி கொலைக்கு ஆண்டன் பாலசிங்கம் வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர,புலிகள்தான் ராஜீவைக் கொன்றதாக அவர் கூறவில்லை என்று விடுதலைப் புலிகள்இயக்க செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.
என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்றுத் துயரம்.அதற்காக வருந்துவதாக தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்திக் கொலைசெய்யப்பட்டதற்கான சூழலையும் அவர் விவரித்திருந்தார்.இந் நிலையில் ஆண்டன் பேட்டி குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விளக்கம்அளித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் டைம்ஸ் நைளதொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
ஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டி குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர்கெகலிய ரம்புகவெல்லா திரித்துக் கூறியுள்ளார். நேற்று வரை ராஜீவ் படுகொலையைமறுத்து வந்த புலிகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொன்றனர் என்று பாலசிங்கம் தனதுபேட்டியின் ஒரு இடத்திலும் கூறவில்லை. இந்த சமபவத்திற்கு அவர் வருத்தம்மட்டுமே தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கும், விடுதலைப் புலிகள்இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் தயா மாஸ்டர்.
முன்னதாக பாலசிங்கம் பேட்டி குறித்து ரம்புகவெல்லா கூறுகையில், பாலசிங்கத்தின்பேட்டி, இந்தியாவுக்கு சில செய்திகளை சொல்லியுள்ளதாக கருதுகிறோம்.அதேசமயம் பாலசிங்கம் சொல்வதை முழுமையாக நம்ப முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தெரிவிக்கும் வாக்குறுதிகள்சந்தேகத்திற்கிடமாவை.
விடுதலைப் புலிகள் விரக்தி அடைய ஆரம்பித்து விட்டார்கள் என்பதையேபாலசிங்கத்தின் பேட்டி காட்டுகிறது. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் புலிகள்இயக்கத்திற்குத் தடை விதித்த பின்னர் அவர்களது நிலைப்பாட்டில் மாறுதல் தெரியஆரம்பித்துள்ளதையே இது உணர்த்துகிறது என்றார் ரம்புகெவல்லா.
சு.சுவாமி கண்டனம்
இதற்கிடையே ராஜீவ்காந்தியைக் கொலை செய்ததற்காக வருத்தம் தெரிவிப்பதாக விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறியிருப்பதுசிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலையை துயரச் சம்பவம் என்றுகூறியிருப்பதன மூலம் இந்தியாவை விடுதலைப புலிகள் அமைப்பு அவமதித்துள்ளது.இது துயரச் சம்பவம் இல்லை.
கொடூரமான படுகொலை. இந்தியாவின் சுயமரியாதைககும், இறையாண்மைக்கும்விடப்பட்ட பகிரங்க சவால்.
விடுதலைப் புலிகள் மன்னிப்பு கேட்க வேண்டிய இடம் நீதிமன்றம்தான்.
இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய பாலசிங்கம்விரும்புவாரேயானால், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அப்படிச் செய்தால், இலங்கையில் உள்ள தமிழர்களைக் காக்க இந்தியா நிச்சயம்நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications