கேரளாவில் வைகோவுடன் புலிகள் சந்திப்பா?: மறுக்கிறது மதிமுக
கொல்லம்:
கேரளாவில் சிகிச்சை பெறச் சென்றுள்ள வைகோ, அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளைரகசியமாக சந்தித்து பேசியதாக அம் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிர தீபிகா என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளசெய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கேரளத்துக்குள் புலிகள் ஊடுருவியுள்ளார்களா என்று கேரள மாநில உளவுத் துறையினர் விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.கொல்லம் மாவட்டத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள பிளான்டேஷன் கார்ப்பரேஷன் எஸ்டேட் உள்படகேரளாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உளவுப் பிரிவினர் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆயுர் வேத சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார். இந்நிலையில் அவர் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ஹோட்டலில் சில புலிகள் இயக்க பிரமுகர்களுடன் ரகசியஆலோசனை நடத்தியுள்ளதாகவும், இந்த விவரம் உளவுத் துறைக்கு கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் ராஷ்ட்ரீய தீபிகா கூறியுள்ளது.
மேலும் பிளான்டேஷன் கார்ப்பரேஷன் எஸ்டேட் தொழிலாளிகளுடன் விடுதலைப் புலிகள் அடிக்கடி தொடர்புகொண்டு வருவதாகவும், போலி பாஸ்போர்ட்டுகள், ரகசியத் தோணி வழியாக புலிகள் வந்திருப்பதாகவும்ராஷ்ட்ரீய தீபிகா கூறுகிறது.
வைகோ-புலிகள் பிரதிநிதிகள் சந்திப்பு குறித்து மதிமுக செய்தித் தொடர்பாளர் நன்மாறனிடம்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,
இதுமாதிரியான செய்திகளை நாஙகள் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவிரும்பவில்லை. நாளைக்கே ஒரு நடிகை வந்து வைகோவை சந்தித்தார் என்று கூடசெய்திகள் வரலாம். இதுமாதிரியான செய்திகள் எல்லாம் சில விஷமிகள் திட்டமிட்டுப்பரப்பும் விஷயம்.
எங்கள் மீது காழப்புணர்ச்சி கொண்டோர் பரப்பும் இதுபோன்ற செய்திகள் குறித்துநாங்கள் கவலை கொள்ளவில்லை. மறுக்கக் கூட நினைக்கவில்லை. காரணம்திட்டமிட்ட அவதூறு விளைவிக்கும் பொய்ச் செய்திகள் இவை.
இன்னொன்று, ராஜபக்ஷே பிரதமரை சந்திக்கும்போது, இலங்கையின் இன்னொருபிரிவான விடுதலைப் புலிகள் அமைப்பினர் அரசு ஆதரவுடன் வைகோவைசந்தித்தால் அதில் என்ன தப்பு இருக்கிறது? வரவேற்கப்பட வேண்டியவிஷயம்தானே? அரசு ஆதரவுடன் யார் வைகோவை சந்தித்தாலும் அதைப் பாராட்டவேண்டியதுதான்.
இந்த செய்தி வருவதற்கு முன்பே, இன்னொரு வதந்தியையும் கிளப்பி விட்டுவிட்டனர். அதாவது வைகோ, விடுதலைப் புலிகள் அமைப்பினரை சந்திப்பதற்காகஇலங்கைக்குப் போய் வந்து கொண்டுள்ளார் என்று. இப்போது இருக்கும் நிலையில்யாராவது இலங்கைக்குப் போக முடியுமா?
வைகோ மருத்துவ சிகிச்சைக்காகத்தான் கேரளா சென்றுள்ளார். சிகிச்சை எடுத்துவருகிறார். அவரது பயணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றார் நன்மாறன்.
இதற்கிடையே திமுகவினர்தான் இதுபோன்ற செய்திகளை திட்டமிட்டுப் பரப்பிவருவதாக மதிமுகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications