சபரிமலை தந்திரி குளிப்பதே இல்லை-பணிக்கர்
திருவனந்தபுரம்:
ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்து சுவாமி விக்கிரகத்தைத் தொட்டு வணங்கியதாகநடிகை ஜெயமாலா கூறியது மற்றும் உன்னிகிருஷண பணிக்கர் இந்த விவகாரத்தில்கூறி வருவது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டறிய மீண்டும் பிரஸ்னம் பார்க்கவேண்டும் என கேரளாவைச் சேர்ந்த பல கோவில் பூசாரிகள் (தந்திரிகள்) திருவாங்கூர்தேவஸ்தான நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோவில் கருவறைககுள் தள்ளப்பட்டு, சுவாமிசிலையை தொட்டு வணங்க நேரிட்டதாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலாகூறியுள்ளார்.
![]() |
கோவில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து,சுவாமி சிலையை தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது.எனவே உன்னிகிருஷ்ண பணிக்கரும், ஜெயமாலாவும் கூட்டு சேர்ந்து எதற்காகவோநாடகமாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந் நிலையில் பணிக்கர் மற்றும் ஜெயமாலா சொல்வதில் உண்மை உள்ளதா,இல்லையா என்பதைக் கண்டறிய மீண்டும் பிரஸ்னம் (சோழிகளை உருட்டிப் போட்டுசாமியிடம் வாக்கு கேட்பது) பார்க்கலாம் என்று கேரளாவில் உள்ள பல்வேறுகோவில்களின் பூசாரிகள், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு யோசனைதெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நடிகை ஜெயமாலா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணைநிநத்த போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குதொடரப் போவதாக குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்ற பூசாரி தெரிவித்துள்ளார்.
![]() |
இந் நிலையில் தான் பிரஸ்னம் நடத்திப் பார்த்தபோது, கோவிலுக்குள் பெண் வந்துபோனதும், கூடவே கள் வாசனையும் இருப்பதும் தெரிந்ததாக குண்டு போட்டுள்ளார்உன்னிகிருஷ்ண பணிக்கர், கூடவே சபரிமலை தந்திரியும், மேல் சாந்தியும்குளிக்காமலேயே பூஜைகள் செய்து வருவதாக உன்னிகிருஷ்ண பணிக்கர் இன்னொருகிரனைட் குண்டை வீசியுள்ளார்.
அவர் கூறுகையில், சபரிமலை கோவிலில் உள்ள தந்திரிகள், மேல் சாந்தி ஆகியோர்குளித்து விட்டுத்தான் தினசரி பூஜைசெய்ய வேண்டும். ஆனால் இப்போது உள்ளமேல்சாந்தி கண்டேறு மோகனரு குளிப்பதே இல்லை. குளிக்காமலேயே அவர் பூஜைசெய்கிறார்.
இதேபோல தந்திரியும் குளிப்பதில்லை. மகா ருத்ர யாகம், சஹஸ்ர கலசம்ஆகியவையும் முறையாக நடப்பதில்லை. சபரிமலையின் புனிதம் இவர்களால்கெட்டுள்ளது. எனவே புனிதத்தைக் காக்க பல்வேறு தந்திரிகளை கொண்ட குழுவைஅமைத்து அதன் நிர்வாகத்தின் கீழ் பூஜை முறைகளை கொண்டு வர வேண்டும்என்றார் பணிக்கர்.














Click it and Unblock the Notifications