ஜெ. கொண்டு வந்த கேபிள் டிவி சட்டம் வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கேபிள் டிவிக்களை அரசே எடுத்து நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று கேபிள் டிவிக்களை அரசே எடுத்துநடத்தும் என்ற சட்டம். சன் டிவியை குறி வைத்து இச் சட்டத்தைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா.

இதையடுத்து இந்தச் சட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என ஆளுனர் பர்னாலாவை சந்தித்து முறையிட்டார்கருணாநிதி. ஆளுநரும் ஒப்புதல் தரவில்லை.

இந் நிலையில், அந்த சட்ட மசோதாவையே வாபஸ் பெறுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து கருணாநிதி கூறுகையில்,

இது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரமே இல்லை. இதனால் அது வாபஸ்பெறப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதாவுக்கு அவரும் ஒப்புதல் தரவில்லை.இது போன்ற சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற முடியாது என்று அவர் பதில் அனுப்பிவிட்டார்.

மணல் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை:

டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து அரசே ஏற்று நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மணல் கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளஆணையிடப்பட்டுள்ளது. அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.

தமிழ்வழி கல்வி-மாணவர்களுக்கு இலவச புத்தகம்

இதற்கிடையே அரசு மானியம் பெறாத பள்ளிகளில் தமிழ் வழியே பயிலும் அனைத்து மாணவ, மாணிவிகளுக்கும் இலவச பாட புத்தகங்கள் வழங்கவும்கருணாநிதி உத்திரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி அடிப்படையில நடைபெறும் வகுப்புகள்ஆகியவற்றில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவசப் பாடநூல்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து கருணாநிதி கடந்த 30.05.2006 அன்று ஆளுநர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியபொழுது தமிழக அரசின் அனுமதி பெற்றுமாநில அரசின் பாடத்திட்டத்தில் தமிழ் வழியிலேயே கற்பிக்கும், அரசு மானியம் பெறாத பள்ளிகளில் பயிலுகின்ற எல்லா மாணவ, மாணவிகளுக்கும்இலவசப் பாடநூல் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, தமிழக அரசின் அனுமதி பெற்று மாநில அரசின் பாடத்திட்டத்தில், தமிழ் வழியில் கற்பிக்கும் அரசு மானியம் பெறாத பள்ளிகளில்1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பாடநூல் வழங்கிட கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி ரூ. 94.84 லட்சம் செலவில், 1.28 லட்சம் மாணவ, மாணவியர் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+