திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு டைல்ஸ்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவல நடைபாதையில் டைல்ஸ் கற்களைப் பதித்து பக்தர்களுக்குவசதி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 கோடி செலவில் இந்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
![]() |
அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டுதிருவண்ணாமலையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும்திருவண்ணாமலையை ஆன்மீக நகராகவும் மாற்ற மத்திய, மாநல அரசுகள்நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக கிரிவலம் வரும் பாதை விசாலமாக்கப்பட்டு, தெருவிளக்குகள்அதிக அளவில் போடப்பட்டன. பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதிகளும்செய்து தரப்பட்டுள்ளன. தற்போது இன்னும் சில வளர்ச்சிப் பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளன.
கிரி வலப் பாதை நெடுகிலும் செயற்கை நீரூற்றுக்களுடன் கூடிய பூங்காக்கள், கோவில்குளங்களை சீர்படுத்தி அழகுபடுத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மேலும், தங்கும் விடுதி ஒன்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதை மேம்பாட்டுக்காக ரூ. 5 கோடி நிதியை மத்திய சுற்றுலாத் துறைஒதுக்கியுள்ளது. இதில் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையின்நடைபாதை முழுவதும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்படவுள்ளன.
இந்தப் பணிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படவுள்ளது. சாலையோரம் உள்ள மரங்களைஅகற்றாமல் மரங்களுக்கு இரு பக்கமும் உள்ள நிலத்தில் டைல்ஸ் நடைபாதைஅமைக்கப்படும். இப்பணிக்காக தல் கட்டமாக ரூ. 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா நுழைவாயில் பகுதியில் அடுத்த வாரம் இந்தப் பணி தொடங்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications